ஜேர்மனியின் Freiburg நகரில் 27 வயது இளைஞர் ஒருவர் வசித்து வந்தார், சம்பவத்தன்று 49 வயதான ஒரு விபச்சார அழகியை குறித்து இளைஞர் தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் அவர் மட்டும் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். அவரின் வீட்டிலிருந்து அடுத்த நாள் துர்நாற்றம் வரவே அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் பார்த்த போது,பெண் ஒருவர் மிக கொடூரமாக மார்பில் கத்தியால் பலமுறை குத்தப்பட்ட நிலையில் கிடந்தார்.
பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்த பொலிசார், விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் Dominican Republicஐ சேர்ந்தவர் என்பதும், கொலை செய்த இளைஞர் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
தற்போது இளைஞனை கைது செய்துள்ள பொலிசார், மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக