திங்கள், 16 ஜனவரி, 2017

தேவலாயத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: வெளிநாட்டவருக்கு வலைவீச்சு

சுவிஸ் தேவாலயத்திற்கு சென்ற சிறுமியை வெளிநாட்டவர் ஒருவர் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Valais மாகாணத்திலே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் வழக்கறிஞர் Valais நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு அருகே உள்ள தேவலாயத்தில் நடக்கும் கூட்டத்திற்கு வாரம் வாரம் வழக்கமாக குடும்பத்தினருடன் சென்று வந்நதுள்ளார். சில நேரம் சிறுமி மட்டும் தனியாக சென்று 
வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி தனியாக சென்றுள்ளார். கூட்டம் முடிந்து தேவாலயத்தை விட்டு வெளியே வரும் வழியில் சிறுமியை மறித்த மர்ம நபர். சிறுமியை அருகே உள்ள மர பட்டறைக்கு தூக்கிச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், குற்றவாளி ஏற்கனவே இரண்டு வழக்குகளில் தொடர்புடைய 41 வயதான மாசிடோனியா சேர்ந்தவர் என தகவல்கள்
 வெளியாகியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.