சுவிற்சர்லாந்து நாட்டை தாக்கிய Egon புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தில் தற்போது விடிய விடிய பெய்யும் மழை மற்றும் மணிக்கு 139 கி.மீ அளவில் வீசும் சூறாவளி காற்றால் சாலையில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சரிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10,000க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
முக்கியமாக குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
பலத்த காற்றுடன் 10 செண்டிமீட்டர் அளவிலான பனிபொழிவின் தாக்கமும் இங்கு அதிகமாக உள்ளது.
இந்த நிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என அந்நாட்டு வானிலை மையங்கள் கூறியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம், நிலைமை விரைவில் சீராகிவிடும் என அரசு அறிவித்திருப்பது
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக