சுவிசில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசாங்கம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
அதன்படி சுவிசில் உள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிக்கை
விடுத்துள்ளார்.
இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் Heinz Walker – Nederkoorn இன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர்
இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சுவிசில் 50,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை நாடு திரும்பி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு
வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக