செவ்வாய், 25 ஜூலை, 2017

வாளால் சுவிட்சர்லாந்தில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்: 5 பேர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் சவோகவுசன் (Schaffhausen) நகரின் மத்திய பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று வாளால் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜேர்மனி எல்லையில் அமைந்துள்ள சவோகவுசன் (Schaffhausen) நகரில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.(24.07.2017)?
உள்ளூர் நேரப்படி காலை 10.39 மணியளவில் பொலிசாருக்கு குறித்த தகவல் தொடர்பில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மட்டுமின்றி அப்பகுதியில் அமைந்துள்ள கடைகள் மற்றும் பொதுமக்கள் புழங்கும் பகுதிகளை
 மூட உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் செயல்பட்டுவரும் நபர் ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில், நபர் ஒருவர் சாலையின் நடுவே நடந்து வந்ததாகவும், திடீரென்று chainsaw எனப்படும் ஆயுதத்தால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியதாக கூறியுள்ளார்.கண்மூடித்தனமான இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் இருவரது நிலை கவலைக்கிடம் எனவும் தெரிய வந்துள்ளது.
சம்பவயிடத்தில் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குறித்த தாக்குதலானது பயங்கரவாத தாக்குதல் அல்ல எனவும், மாயமான மர்ம நபரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மிகவும் ஆபத்தானவர் எனவும் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.