வியாழன், 20 ஜூலை, 2017

எஸ்.பி கட்சி கோரிக்கை சுவிஸில் பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை?:

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் சுவிஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி கட்சி
 முன் வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி அந்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை.
சுவிஸில் வசிக்கும் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கப்படுகிறது.
ஆனால், இச்சட்டத்தை நீக்கிவிட்டு சுவிஸில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என SP கட்சியின் தேசிய கவுன்சிலரான Cedric Wermuth என்பவர் கோரிக்கை 
விடுத்துள்ளார்.
இதுக் குறித்து அவர் பேசியபோது, ‘அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் அந்நாடுகளின் குடியுரிமை தானாகவே கிடைக்கிறது.
பெற்றோர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைப்பதில் 
எவ்வித தடையும் இல்லை.
இதுபோன்ற ஒரு சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசும் பின்பற்ற வேண்டும்.
சுவிஸில் புகலிடம் பெற்ற அகதிகளாக இருந்தாலும், புகலிடத்திற்காக காத்திருக்கும் பெற்றோர்களாக இருந்தாலும், சுவிஸில் மண்ணில் இவர்களுக்கு குழந்தை பிறந்தால் சுவிஸ் குடியுரிமை தானாக கிடைக்கப்பெற வேண்டும்.
ஜனநாயகம் என்பது அனைத்து மக்களையும் ஒன்றாக இணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களின் ஒருமைப்பாட்டிற்கு முடிவாக இருக்க கூடாது’ என Cedric Wermuth கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும், இவரது கருத்திற்கு FDP மற்றும் SVP கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.