புதன், 5 ஜூலை, 2017

சூரிச் நகரில் ட்ராம் மீது சிறுமி மோதி பலியான துயரச்சம்பவம்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ட்ராம் வாகனம் மீது மோதி சிறுமி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள சூரிச் நகரில் தான் இத்துயர சம்பவம் 
நிகழ்ந்துள்ளது.
நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் சூரிச்சிற்கு அருகில் வசித்து வந்த 12 வயது சிறுமி ஒருவர் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின்னர் Glattalbahn என்ற இடத்திற்கு வந்தபோது ட்ராம் வாகனம் செல்லக்கூடிய பாதையை சிறுமி கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பாதையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வந்த ட்ராம் வாகனம் சிறுமியின் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் சைக்கிளுடன் சில மீற்றர் தூரம் இழுத்துச்செல்லப்பட்ட சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தினால் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து பொலிசாருக்கு உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
ட்ராம் வாகனம் மீது மோதி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.