சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியின் பிரசவகாலத்தின் போது கணவருக்கு ஊதியத்துடன் கூடிய 20 நாள் விடுமுறை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் வாக்கெடுப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், சுவீடன், போலந்து, பின்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மனைவியின் பிரசவகாலத்தின் போது கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கி
வருகின்றன.
இந்த வரிசையில் போர்ச்சுகல் நாடு 100 சதவிகித ஊதியத்துடன் 5 வாரங்கள் கணவருக்கு விடுமுறை வழங்கி வருகிறது.
எனினும் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதை நிராகரித்து
வருகிறது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Paternity Leave Now! என்ற பிரச்சார குழு இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் ஆதரவை திரட்டி வருகிறது.
சுமார் 1 லட்சம் மக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்தால் இதுகுறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், எதிர்ப்பார்த்ததை விட தற்போது 1,30,000 பேர் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்து கையெழுத்திட்டுள்ளனர்.
இதுக் குறித்து பிரச்சார குழுவின் தலைவரான Adrian Wuthrich என்பவர் பேசியபோது, பொதுமக்களின் கோரிக்கை மனு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இத்திட்டத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஒப்புதல் அளித்துள்ளதால் 6 மாதங்களுக்கு பிறகு அரசாங்கம் நடத்தவுள்ள பொதுவாக்கெடுப்பு வெற்றிப் பெற வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் ஆதரவை தொடர்ந்து இத்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துவதில் தடை இருக்க முடியாது என Adrian Wuthrich தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக