செவ்வாய், 11 ஜூலை, 2017

மனைவியின் பிரசவத்திற்கு கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியின் பிரசவகாலத்தின் போது கணவருக்கு ஊதியத்துடன் கூடிய 20 நாள் விடுமுறை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் வாக்கெடுப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், சுவீடன், போலந்து, பின்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மனைவியின் பிரசவகாலத்தின் போது கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கி
 வருகின்றன.
இந்த வரிசையில் போர்ச்சுகல் நாடு 100 சதவிகித ஊதியத்துடன் 5 வாரங்கள் கணவருக்கு விடுமுறை வழங்கி வருகிறது.
எனினும் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதை நிராகரித்து 
வருகிறது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Paternity Leave Now! என்ற பிரச்சார குழு இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் ஆதரவை திரட்டி வருகிறது.
சுமார் 1 லட்சம் மக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்தால் இதுகுறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், எதிர்ப்பார்த்ததை விட தற்போது 1,30,000 பேர் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்து கையெழுத்திட்டுள்ளனர்.
இதுக் குறித்து பிரச்சார குழுவின் தலைவரான Adrian Wuthrich என்பவர் பேசியபோது, பொதுமக்களின் கோரிக்கை மனு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இத்திட்டத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஒப்புதல் அளித்துள்ளதால் 6 மாதங்களுக்கு பிறகு அரசாங்கம் நடத்தவுள்ள பொதுவாக்கெடுப்பு வெற்றிப் பெற வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் ஆதரவை தொடர்ந்து இத்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துவதில் தடை இருக்க முடியாது என Adrian Wuthrich தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 5 ஜூலை, 2017

சூரிச் நகரில் ட்ராம் மீது சிறுமி மோதி பலியான துயரச்சம்பவம்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ட்ராம் வாகனம் மீது மோதி சிறுமி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள சூரிச் நகரில் தான் இத்துயர சம்பவம் 
நிகழ்ந்துள்ளது.
நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் சூரிச்சிற்கு அருகில் வசித்து வந்த 12 வயது சிறுமி ஒருவர் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின்னர் Glattalbahn என்ற இடத்திற்கு வந்தபோது ட்ராம் வாகனம் செல்லக்கூடிய பாதையை சிறுமி கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பாதையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வந்த ட்ராம் வாகனம் சிறுமியின் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் சைக்கிளுடன் சில மீற்றர் தூரம் இழுத்துச்செல்லப்பட்ட சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
ஆனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தினால் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து பொலிசாருக்கு உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
ட்ராம் வாகனம் மீது மோதி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 19 ஜூன், 2017

சில இலங்கையர் சுவிஸ் வங்கியில் பதுக்கியுள்ள பணத்தால் ஆபத்து?

மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட பணத்தை பறிமுதல் செய்வதற்காக சுவிட்சர்லாந்து வங்கியுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை 
ஏற்படுத்தவுள்ளது.
இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
(advertisement)
அதற்கமைய விசாரணை மேற்கொள்ளல், வழக்கு தாக்கல் செய்தல், குற்றத்தை தடுத்தல் மற்றும் மோசடியான முறையில் சேமித்த பணத்தை பறிமுதல் செய்தல் ஆகியன தொடர்பில் இருநாட்டு சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பில் இரு நாட்டிற்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி கொள்ள அமைச்சரவையினால்
 தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி 
வழங்கியுள்ளது.
பல்வேறு நபர்களினால் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரியளவு பணத்தை சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளின் பிரதான தரப்பு வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீது குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவ்வாறு மோசடியான முறையில் பணம் சேகரித்து வைப்பு செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான ஆவணங்களும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 27 ஏப்ரல், 2017

உலகின் சிறந்த நாணயமாக சுவிட்சர்லாந்து நாணயம் தெரிவு!

சுவிட்சர்லாந்தின் 50 franc நாணயம் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயமாக தேர்வாகியுள்ளது.
உலகின் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயம் எது என்ற போட்டியை International Bank Note Society நிறுவனம் சமீபத்தில்
 நடைபெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளின் 18 விதமான நாணயங்கள் காட்சிக்கு வைக்கபட்டது.
இதில் சிறந்த நாணயமாக சுவிட்சர்லாந்தில் 50 franc நாணயம் தேர்வானது. மேலும், அந்த நாணயத்துக்கு Bank Note of the year என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் சுவிஸ் நாணயத்துக்கு அடுத்த இடத்தை மாலைதீவின் 1000 Rufiyaa நாணயம் கைப்பற்றியது.
மாலைதீவு நாணயத்துக்கும், சுவிஸ் நாணயத்துக்கும் முதல் இடத்துக்கான தேர்வு கடுமையானதாக இருந்தது.
கடந்த 2016ல் மட்டும் உலக முழுவதும் 120 புதிய நாணயங்கள் மற்றும் பழைய நாணயங்கள் புது பொலிவு பெற்று வெளியிடப்பட்டது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஐம்பத்தைந்து ஆண்டுகள் சுவிஸில் வசித்த நபரைய்நாடு கடத்த அரசு உத்தரவு

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து 55 ஆண்டுகள் வசித்து வந்த நபர் ஒருவரை அவரது பெற்றோரின் சொந்த நாடான ஸ்பெயினிற்கு திருப்பி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள Freiburg நகரில் கடந்த 1962-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெற்றோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை வளர்ந்தது முதல் கல்வி பயின்றது, அலுவலக வேலைக்கு சென்றது எல்லாம் சுவிட்சர்லாந்து நாட்டில் தான்.
சுவிஸில் குடியிருப்பு அனுமதி பெற்ற அவர் 17 வயதானது முதல் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
திருடுவது, அடிதடியில் ஈடுப்படுவது, போதை மருந்து பழக்கம், சாலை விதிகளை மீறுவது, அரசு அதிகாரிகளுடன் தகராறில் ஈடுப்பட்டது உள்ளிட்ட 31 குற்றங்களை பல்வேறு வயதில்
 செய்து வந்துள்ளார்.
இவற்றில் சில குற்றங்களுக்காக சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். தற்போது 55 வயதை அடைந்துள்ள நபரை ஸ்பெயின் நாட்டிற்கு அனுப்ப சுவிஸ் குடியமர்வு அதிகாரிகள் 
உத்தரவிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் கடந்தாண் இவருடைய குடியிருப்பு அனுமதியை அதிகாரிகள் பறித்துள்ளனர்.
மேலும், இவருக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
சுவிஸில் பிறந்து, கல்வி பயின்று பணியில் இருந்தாலும் கூட சமூகத்துடன் ஒற்றுமையாக இருக்கவில்லை எனில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 8 ஏப்ரல், 2017

அதிகமாக சுவிஸில் வெளிநாட்டினர்கள் வசிக்கும் பகுதிகளின் விரிவான பட்டியல்

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறியுள்ள மற்றும் பணி நிமித்தமாக வசித்து வரும் வெளிநாட்டினர்கள் எந்த பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சுவிஸ் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், சுவிஸில் தற்போது 2,100,100 வெளிநாட்டினர்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையானது 2.5 சதவிகிதம் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.
சுவிஸில் உள்ள 26 மாகாணங்களை ஒப்பிடுகையில் அதிக வெளிநாட்டினர்கள் வசிக்கும் பட்டியலில் சூரிச் முதல் இடம் பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வாட் இரண்டாவது இடத்திலும், ஜெனிவா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மாகாண வாரியாக வெளிநாட்டினர்கள் வசிக்கும் பட்டியல் இதோ!
Geneva 196738
Jura 10642
Neuenburg 45680
Aargau 163664
Lucern 74106
Nidwalden 6029
Vaud 263775
Appenzell Ausserrhoden 8907
Schaffhausen 20872
Thurgau 99530
Glarus 9493
Graubunden 36608
Schwyz 32250
Solothurn 59171
Ticino 99530
Uri 4293
Zurich 395136
Zug 34119
Freiburg 69775
Valais 78647
Basel-Landschaft 63609
Bern 164783
Basel-Stadt 69018
St. Gallen 119662
Obwalden 5483
Appenzell Innerrhoden 1772
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 3 ஏப்ரல், 2017

பாலியல் தாக்குதல்கள் சுவிஸில் அதிகரிப்பு: புலம்பெயர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகளவில் வெளிநாட்டினர்களால் ஏற்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சுவிஸில் கடந்தாண்டு நிகழ்ந்த பாலியல் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை காவல் துறை வெளியிட்டுள்ளது.
அதில், 2015-ம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்தாண்டு பாலியல் தாக்குதல்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டினர்களால் அதிகளவில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாக அந்த அறிவிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்தாண்டு பாலியல் தாக்குதல்களை நடத்தியதாக 495 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் 298 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
மேலும், இந்த 298 நபர்களில் 51 பேர் சுவிஸில் புகலிடம் கோரி காத்திருப்பவர்கள் என பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் வன்கொடுமைக்கு வெளிநாட்டினர்கள் அதிகளவில் காரணமாக இருப்பது கவலை அளிக்கிறது.
நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சார விளம்பரங்கள் வெளியிட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட புலம்பெயர்ந்தவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.