செவ்வாய், 13 மார்ச், 2018

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் கட்டணம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை குறைவாககாணப்பட்ட நிலையில் புகலிடம் கோருவோருக்கான கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் பெரும்பாலான புகலிடம் கோருவோருக்கான மையங்கள் பாதி மட்டுமே நிரம்பின.
அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் 3700 புகலிடம் கோருவோருக்கான படுக்கைகளில் கிட்டத்தட்ட பாதி வெறுமையாக இருந்ததாக SonntagsZeitung என்னும் நாளிதழ் நேற்று செய்தி 
வெளியிட்டது.
இந்த புள்ளிவிவரம் State Secretariat for Migration (SEM)இடமிருந்து பெறப்பட்டது. அதன்படி 2017 ஆம் ஆண்டில் 20 புகலிடம் கோருவோருக்கான மையங்களில் இரண்டில் மட்டுமே முக்கால்வாசி நிரம்பியிருந்தது. தனி நபருக்கான செலவு அதிகரித்ததன் காரணமாக இப்படி நிகழ்ந்துள்ளதாக
 கருதப்படுகிறது.
புகலிடம் கோரும் ஒரு நபருக்கான ஒரு நாள் செலவு 83 சுவிஸ் ஃப்ராங்குகள் என்று அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உணவு, பாதுகாப்பு மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தையும்
 உள்ளடக்கியதாகும்.
2017 ஆம் ஆண்டிலோ இது 132 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்தது. Bernese Oberlandஇலுள்ள ஒரு கிராமத்தில் இந்த தொகை 350 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்தது. இதற்குக் காரணம் அந்த கிராமத்தில் வெகு சில புகலிடம் கோருவோரே இருக்கின்றனர்.
தவறான பட்ஜெட்டால் அரசு 30 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை இழப்பதாக SonntagsZeitung குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் SEM என்னும் State Secretariat for Migration,புகலிடம் கோருவோரின்
 எண்ணிக்கையில் ஏற்படும் உயர்வு தாழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சுவிட்சர்லாந்து தயாராக இருக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு புகலிடத் தேவைகள் குறைவாக இருந்ததால் 900 படுக்கைகளை நீக்கியதாகவும் 
தெரிவித்துள்ளது.
அதேபோல் ஞாயிறன்று அரசாங்கம் புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர் ஒருவருக்கு, அவர் அனுபவித்த சித்திரவதை மற்றும் வேதனைக்காக பல ஆயிரம் சுவிஸ் ஃப்ராங்குகளை இழப்பீடாக வழங்கியதை SonntagsZeitung சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 6 மார்ச், 2018

சுவிசில் கேபிள் TVக்கு பணம் கட்டுவது சரியென வாக்களித்த மக்கள்

சுவிட்சர்லாந்தில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு கட்டணம் வசூலிப்பது தொடரவேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதற்காக நேற்றைய தினம் வாக்கெடுப்புஒன்று நடத்தப்பட்டது.
ஆச்சரியத்திற்குரிய விதமாக மக்கள் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்தனர்.
சுவிட்சர்லாந்து மக்கள் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்காக ஆண்டுதோறும் வீடொன்றுக்கு 451 சுவிஸ் ஃப்ராங்குகளை கட்டணமாக
 செலுத்துகின்றனர்.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தாங்கள் பார்க்காத நிகழ்ச்சிகளுக்காக கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்
இதனால் சுவிட்சர்லாந்தில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு கட்டணம் வசூலிப்பது தொடரவேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 71% பேர் 73 மாகாணங்களில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்தனர்.
சுவிட்சர்லாந்து ஒரு சிறிய நாடு என்றும் அதன் கலாச்சாரத்தையும் மொழி வித்தியாசங்களையும் பிரதிபலிக்கும் வகையில் செயல்படும் ஒரு ஒளி, ஒலிபரப்பும் அமைப்பு நிச்சயம் தேவை என்று பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்த பிரிவினர் கூறுகின்றனர்.
சுவிட்சர்லாந்தின் ஒளி, ஒலிபரப்பும் அமைப்பான SBCயின் டைரக்டர் ஜெனரல் Gilles Marchand, இந்த வாக்கெடுப்பு முடிவுகள் நேர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இந்த முடிவை வரவேற்கும் வகையில் தாங்கள் TV மற்றும் ரேடியோவுக்கான கட்டணத்தை முடிந்த அளவுக்கு குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து அரசும் 2019 முதல் இனி TV மற்றும் ரேடியோவுக்கான கட்டணத்தில் ஒரு கணிசமான தொகை குறைக்கப்படும் 
என்று கூறியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

அப்பா, மகள் சுவிசில் கொள்ளை: கடத்தலில் ஈடுபட்டவர்கள் .கைது

சுவிட்சர்லாந்தில் 20 முதல் 30 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுவிஸ் செக்யூரிட்டி நிறுவன டிரைவர் ஒருவர்
 பணத்துடன் வானில் சென்று கொண்டிருந்த போது, போன் செய்த மர்ம நபர்கள், மகளை கடத்தி வைத்துள்ளதாகவும், கொள்ளையர்களிடம் பணத்தை உடனே ஒப்படைக்க வேண்டும் எனவும் மிரட்டியதாகவும் 
கூறினார்.
இதனை தொடர்ந்து பணம் கொள்ளை போனதாகவும், அவரது மகள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் அவளது உடலில் காயங்கள் 
எதுவும் இல்லை.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளைச்சம்பவம் ஒரு நாடகம் என்பதைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தப் பெண் தான் கடத்தப்பட்டதாகக் கூறியதும், அவள் தந்தை பணத்தைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறியதும் அனைத்துமே அவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து நடத்திய நாடகம் என்று பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
22 வயதுள்ள அந்தப் பெண்ணையும், அவளது தந்தையையும் அவர்களது கூட்டாளி ஒருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பணத்துடன் மாயமான அவர்களது கூட்டாளிகளான மற்ற மூன்று பேரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த யாராக இருந்தாலும் தகவல் தருமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு கோரிக்கை 
விடுத்துள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 3 பிப்ரவரி, 2018

நீங்கள் சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது.
சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை 
தற்போது பார்ப்போம்.
முதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அளிக்கும் அதிகாரப்பூர்வமான ‘அழைப்பு கடிதம்’(Letter of Invitation) அல்லது ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) ஆகிய இரண்டு கடிதங்களில் ஒன்றை உங்கள் தாய்நாட்டில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு கொடுக்க வேண்டும்.அழைப்பு கடிதம்
சுவிஸில் உள்ள அந்த நிறுவனம்/தனிநபர் உங்களை அதிகாரப்பூர்வமாக அழைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
மேலும், அந்த அழைப்பு கடிதத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் சுவிஸில் தங்குகிறீர்கள்? என்ன நோக்கத்திற்காக
 தங்குகிறீர்கள்?
மேலும், எத்தனை முறை சுவிஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறீர்கள்? என்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்.
அதேபோல், இந்த கடிதத்தில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரை தொடர்புக்கொள்ளும் முகவரியும் உங்களுடைய முகவரியும் இடம்பெற வேண்டும்.
உதாரணத்திற்கு, குடும்ப பெயர், முதல் பெயர், பிறந்த திகதி, குடியுரிமை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும்.
மேலும், உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் கையெழுத்து மற்றும் அதன் திகதியும் இடம்பெற வேண்டும்.
முக்கியமாக, இந்த அழைப்பு கடிதம் சுவிஸ் நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக, சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான நிதி வசதிகள் உங்களிடம் இருப்பதை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் 
நிரூபிக்க வேண்டும்.
இதனை நீங்கள் வாங்கும் ஊதிய அறிக்கை அல்லது வங்கி இருப்பு அறிக்கை மூலம் அதிகாரிகளிடம் நிரூபிக்கலாம்.
இவ்வாறு இல்லாமல், உங்களுடைய அனைத்து செலவுகளையும் உங்களை சுவிஸ் நாட்டில் எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் ஏற்றுக்கொண்டால், அதனை அழைப்பு கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.
நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்
சுவிஸ் நாட்டிற்கு செல்ல உங்களிடம் போதுமான நிதி ஆதாரம் இல்லை என சுவிஸ் தூதரக அதிகாரிகள் சந்தேகம் அடைந்தால், அவர்களிடம் நீங்கள் ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) அளிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
இந்த கடிதமான அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும். அதாவது, உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள உள்ளூர் அதிகாரி அல்லது மாகாண குடியமர்வு துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்றுருக்க வேண்டும்.
இந்த கடிதத்தில் கையெழுத்து போடுவதன் மூலம் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள குடியமர்வு துறைக்கு 30,000 பிராங்க் வரை செலுத்த நேரிடும்.
காப்பீட்டு ஆவணம்
சில நேரங்களில் உங்களுடைய அல்லது உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் காப்பீட்டு ஆவணத்தை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த காப்பீட்டு கடிதமானது 30,000 பிராங்க் வரையிலான மருத்துவ செலவினங்களை ஏற்றுக்கொள்ளும்.
அதாவது, சுவிஸில் நீங்கள் தங்கியிருக்கும்போது உங்களுக்கு உடல்நலக்குறைவு காரணமாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அல்லது சுவிஸில் மருத்துவம் பார்க்கவும் மற்றும் விபத்து உள்ளிட்ட பிற சூழ்நிலைகளில் உங்களுடைய செலவினங்களை இந்த காப்பீடு ஏற்றுக்கொள்ளும்.
மேலே கூறிய இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினால், விசா பெறுவதற்கான அடுத்த கட்டத்தை 
அடைய முடியும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 24 ஜனவரி, 2018

சுவிசில் நாட்டில் உலகின் புதுமையான மின் நிலையம் !

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின் நிலையத்தை, ஐஸ்லாந்து நாட்டில்
 நிறுவியுள்ளது.
இந்த மின் நிறுவனம், இதுவரை இல்லாத புதுமையான வழியில் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. வழக்கமான அனல்மின் நிலையங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை உமிழும்.
ஆனால், இந்த மின் நிலையம் அதற்கு எதிர்மறையாக செயல்பட்டு, மின்னாற்றலை உற்பத்தி செய்கிறது.
இந்த மின்நிலையம், நிலத்தடியில் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் உள்ள கருங்கல் பாறைகளில் இருந்து கார்பன் -டை-ஆக்ஸைடை உறிஞ்சி, குறைந்த வெப்பநிலைக்கு அதனை உட்படுத்தி மின்சாரமாக
 மாற்றுகிறது.
இந்த தொழில்நுட்பம் ‘கார்பிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை சுவிஸ் விஞ்ஞானிகள் குழு, 2 ஆண்டுகளின் முயற்சியின் பலனாக
 கண்டுபிடித்தது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘பூமி முழுவதும் இந்த பாறை அடுக்கு பரவலாக காணப்படுகிறது. எனவே, மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல், எந்த இடத்திலும் இந்த தொழில்நுட்பத்தில் 
மின் உற்பத்தி செய்ய முடியும்’ என தெரிவித்துள்ளனர்.எனினும், பூமிக்கு அடியில் உள்ள கார்பனை உறிஞ்சுவதன் மூலமாக ஏற்படும் எதிர்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் 
வெளியாகவில்லை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 22 ஜனவரி, 2018

சுவிஸ் நோசத்தை (Neuchâtel) தமிழர் ஒன்றிய விழா சிறப்பாக நடந்தது

சுவிஸ் நோசத்தை   (Neuchâtel)  தமிழர் ஒன்றிய தமிழர் திருநாள் விழா 2018,மாநில உறவுகள் ஒன்று கூடி பொங்கல் கொண்டாட்டம்,இளம் சிறார்களுக்கான
 பண்பாட்டு விழா அமை
ந்திருந்தது தமிழர் திருநாளை நாடுதோறும் மட்டுமல்ல தமிழர்வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் கொண்டாடி நிற்பது தமிழ்  சிறப்புக்களில் ஒன்றாகும் மிக நன்றாகும் வாழ்கவாழ்க  தமிழ்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







திங்கள், 8 ஜனவரி, 2018

எவ்விதமான வரிகள் சுவிஸ்சில் குடியேறியவர்களுக்கு அறவிடப்படுகிறது?

சுவிஸ்சில் குடியேறிய   ஆண் மற்றும் பெண் சுவிஸ் மக்களைப் போன்று ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்களுக்கும் வரி செலுத்த வேண்டிய கடமையுண்டு. இதை ஒருவர் வசிக்கும் உள்ளுராட்சிசபைக்கு செலுத்தும்
 வரி உள்ளுராட்சிசபை வரி என்றும்,மற்றும் மாநிலத்திற்கு செலுத்தும் வரி மாநில வரி என்றும், மத்திய அரசிற்குக் கொடுப்பது- இதை நேரடியான மத்திய அரசவரி என்றும் அழைப்பர்.
வரி பெறும் திட்டம் அதிகமான நபர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு வரி அறிவித்தலை நிரப்ப வேண்டியதாக ஒழுங்குபண்ணப்பட்டுள்ளது. இதில் நீங்கள், கடந்த வருடம் எவ்வளவு ஊதியம் 
பெற்றுள்ளீர்கள், எவ்வளவு சொத்துகள் உள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும். இந்த வரி அறிவித்தலை உள்ளுர் வரித் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும். இது வரியின் அளவைக் கணிப்பதுடன் அதைப் பட்டியலிட்டுக் காட்டும்.
சுவிசில் குவெலென் வரி என ஒன்றுள்ளது. இது தொழில் வழங்குனரால் நேரடியாக வரி செலுத்தும் கடமையுள்ள நபரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும். அவர்கள் இந்த வரியை ஒவ்வொரு முறையும் ஊதியத்திலிருந்து கழித்து அதை வரித்திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் 
நிரந்தர வதிவிட அனுமதி c இல்லாத ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்கள், எவராவது நிரந்தர வதிவிட அனுமதி c உள்ளவரை அல்லது சுவிஸ் பிரஜாவுரிமை உள்ளவரைத் திருமணம் செய்திருந்தால் இது அவர்களுக்குப் பொருந்தாது. ஒவ்வொரு மாநிலங்களையும் பொறுத்து குவெலென் வரி வித்தியாசமான தொகையாக இருக்கும், இது வருடத்திற்கு
 வருடம் மாறுபடும்.
ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்களிடமிருந்து இரு தடவைகள் வரி பெறுவதைத் தடுப்பதற்காக – சுவிசிலும் அவர்களின் தாய்நாட்டிலும்- சுவிஸ் 50 க்கு மேலான நாடுகளுடன் இரட்டை வரி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் வரி ஏய்ப்பு விடயங்களின்போது ஒரு
 முக்கிய பங்கை வகிக்கும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Blogger இயக்குவது.