செவ்வாய், 18 டிசம்பர், 2018

சூரிச் நகரில் நெடுஞ்சாலையில் விபத்தில் ஒரு பெண் மரணம்

சூரிச் நகரின் A3 நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் பெண் ஒருவர் மரணமடைந்ததுடன் 45 பேர் 
காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் லேசான காயங்களுடன் தப்பிய பயணிகளை அடுத்த பேருந்துக்காக நிர்வாகிகள் அந்த கடும் குளிரில் சுமார் 14 மணி நேரம் காக்கவைத்துள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
16.12.2018.ஞாயிறு காலை சுமார் 4.15 மணியளவில் A3 நெடுஞ்சாலையில் Genoa பகுதியில் இருந்து Dusseldorf செல்லும் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது.
இதில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். எஞ்சிய 41 பேர் லேசான காயங்களுடன்
 தப்பியுள்ளனர்.
விபத்து காரணமாக Brunau மற்றும் Wiedikon பகுதி சாலை போக்குவரத்தை துண்டித்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சூரிச் மண்டல பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர் அரு
காமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு 
அனுப்பி வைத்துள்ளனர்.
சுவிஸ் நாட்டவர் ஒருவர், ஜேரமனி நாட்டவர் ஒருவர், இத்தாலியர் 13 பேர், அல்பேனியா நாட்டவர்கள் இருவர் என மொத்த 51 பேர் குறித்த பேருந்தில் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே லேசான காயங்களுடன் தப்பிய பயணிகளை அடுத்த பேருந்துக்காக நிர்வாகிகள் அந்த கடும் குளிரில் சுமார் 14 மணி நேரம் காக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 10 டிசம்பர், 2018

ஈழத்தமிழ் பெண் சுவிட்சர்லாந்தில் ஒரு கிலோ தங்க கிரீடத்தை வென்றர்

புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள IBC- தமிழ் தொலைக்காட்சியின் நாட்டியத் தாரகை நடனக்கலைப் போட்டி நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மிதுஜா அமிர்தலிங்கம்
 வெற்றி பெற்றார்.
சுவிட்சலாந்து போரம் பிரைபோர்க் மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐ.பீ.சி. தமிழா பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சர்வதேச நடுவர்கள் முன்நிலையில் தமது திறமைகளை நிரூபித்த ஐந்து போட்டியாளர்கள் மத்தியில் இருந்து மிதுஜா வெற்றியாளராகத் 
தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெற்றிப்பெற்ற மிதுஜாவிற்கு IBC தமிழ் நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன் மற்றும் வைதேகி பாஸ்கரன் ஆகியோர் ஒரு கிலோ தங்கத்தினாலான கிரீடத்தை வெற்றியாளருக்கு 
சூடியிருந்தார்கள்.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கு பற்றிய மற்றைய நான்கு போட்டியாளர்களுக்கும் தங்கம் பரிசுகளாக வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.பீ.சி தமிழா
 நிகழ்ச்சியானது 
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததுடன், அந்த நிகழ்ச்சியின் ஒலி, ஒளி அமைப்புக்கள் மிகப்பெரிய பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
புலம்பெயர் தமிர்களிடையே இருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவற்றை உலகறியச் செய்யும் பாரிய பணியையும் ஐ.பீ.சி தமிழ் மேற்கொண்டு வருகின்றது.
ஐ.பீ.சி தமிழினால் முன்னெடுக்கப்படும் பல செயற்றிட்டங்கள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் ஊடாக தமது திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு மேடை மட்டுமல்லாமல் தமது திறமைக்கான ஒரு அங்கீகாரத்தையும் போட்டியாளர்கள் பெற்றுக்கொள்கின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 6 டிசம்பர், 2018

சூரிச் அட்லிஸ்வில் பகுதியில் வங்கிக் கொள்ளை

சுவிட்சர்லாந்தில் சூரிச் அட்லிஸ்விலில் பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக் கொண்டு, வங்கிக் கொள்ளையர்கள் இருவர் ஏராளமான பணத்தை அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை சூரிச் பகுதியிலுள்ள Adliswilஇல் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் நுழைந்த வங்கிக் கொள்ளையர்கள் இருவர் அந்த பெண் வங்கி ஊழியருக்கு கைவிலங்கிட்டு விட்டு கொள்ளைச் 
சம்பவத்தில் ஈடுபட்டனர்.
காலையில் தனியாக வந்த அந்த பெண் ழியர் வங்கியை திறந்தார்.முகத்தை மறைக்கும் வகையிலான குளிர் தொப்பி அணிந்திருந்த இருவர், 
அவ்வழியே வந்தனர்.
அவர்களில் ஒருவர் குழந்தையை வைத்து தள்ளிக் கொண்டு வரும் தள்ளு வண்டி ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தார்.
சட்டென வங்கிக்குள் நுழைந்த அவர்கள், அந்த பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து, அவருக்கு கைவிலங்கு ஒன்றை மாட்டி, ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.
பின்னர் வங்கி லாக்கரைத் திறந்து ஆயிரக்கணக்கான ஃப்ராங்குகளை அள்ளிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் 
பிடித்தனர்.
அவர்கள் குளிருக்கான தொப்பியும் வெளிர் வண்ண கால் சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவித்த பொலிசார், தள்ளு வண்டியில் குழந்தைக்கு பதில் பொம்மை ஒன்றை வைத்திருக்கலாம் 
என்று தெரிவித்தனர்.
அவர்கள் 35 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைபட்டவர்கள் என்றும் 180 சென்றிமீற்றர் உயரம் உடையவர்கள் என்றும் பொலிசார் 
தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் நல்ல வேளையாக அந்த பெண் வங்கி ஊழியருக்கு அந்த கொள்ளையர்கள் எந்த காயமும் ஏற்படுத்தவில்லை.கொள்ளையர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பெர்ன் மாநிலத்தில் தனிமையில் இருந்தவர் மீது கொடூர தாக்குதல்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தனியாக இருந்த நபரை தாக்கி மூவர் கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்ன் மண்டலத்தின் Unterseen பகுதியில் குறித்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதனன்று இரவு பாதிக்கப்பட்ட அந்த நபர் தமது குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார். அப்போது மூவர் கும்பல் ஒன்று அவரது குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது.
 பின்னர் குறித்த நபரை தாக்கிய கும்பல் அவரை மிரட்டி அங்கிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு 
தப்பியுள்ளது.
கயிறால் பிணைக்கப்பட்டிருந்த அந்த நபர் தனது முயற்சியால் விடுவிக்கப்பட்டு, பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை புகா
ராக அளித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்குப் பதிந்து மாயமான மூவர் கும்பலை 
தேடி வருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 1 டிசம்பர், 2018

சுவிட்சர்லாந்தின் வெளியான பில்லியனர்கள் பட்டியல்

சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியலில் 51 பில்லியன் பிராங்குகளுடன் முதலிடத்தில் Family Kamprad உள்ளது.
சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 300 பேர் கொண்ட இந்த பட்டியலில் முதலிடத்தை IKEA குழுமத்தின் Kamprad சகோதரர்கள் தக்கவைத்துள்ளனர்.
கடந்த ஆண்டை விடவும் இந்த 300 பேரின் சொத்துமதிப்பு அதிகரித்திருந்தாலும் எதிர்பார்த்தபடி இல்லை என்றே கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக இந்த 300 பில்லியனர்களின் சொத்துமதிப்பு 675 பில்லியன் பிராங்குகள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் 300 பேரும் தனித்தனியாக ஆண்டுக்கு சுமார் 2,251 மில்லியன் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டை விடவும் இந்த முறை சுவிஸ் செல்வந்தர் ஒருவர் சராசரியாக 1.7 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு வருவாயை அதிகரித்திருந்தாலும் அது குறைவாகவே கருதப்படுகிறது.
இந்த 300 பில்லியனர்களும் கூட்டாக தங்கள் சொத்துக்களை சுவிஸ் குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு எடுப்பார்கள் எனில், தனி மனிதர் ஒருவருக்கு சுமார் 79,400 பிராங்குகள் வரை கி8டைக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் மொத்த உள்நாட்டுஉற்பத்தியை விடவும் இந்த 300 செல்வந்தர்களின் சொத்துமதிப்பு 3 மடங்கு வேகத்தில் வளர்ச்சியை எட்டுவதாக கூறப்படுகிறது.
சுவிஸின் டாப் 10 பில்லியனர்களின் மொத்த சொத்துமதிப்பு 203 பில்லியன் பிராங்குகள் எனவும், இந்த ஆண்டு மட்டும் இந்த 10 பேரும் 2 பில்லியன் பிராங்குகள் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 30 நவம்பர், 2018

தீப்பிடித்த்து சுவிட்சர்லாந்தில் ஆறு அகதிகள் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் Solothurn நகரில் அகதிகள் தங்கியிருந்ததாக கருதப்படும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் பற்றிய தீ, குழந்தைகள் உட்பட ஆறு பேரின் உயிரைக் குடித்த நிலையில், தீப்பிடித்ததற்கு காரணம் அணைக்கப்படாமல் வீசியெறியப்பட்ட ஒரு சிகரெட்டாக இருக்கலாம் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தீப்பிடித்த அந்த கட்டிடத்தில் இருபதுபேர் இருந்ததாகவும் பெரும்பாலோர் தீயணைப்புபடையினரால் மீட்கப்பட்டுவிட்டாலும் ஆறு பேரை மீட்க முடியாமல் போனதாகவும் பொலிசார்
 தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடலை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
அந்த கட்டிடத்தின் கீழ்பகுதியில் தீப்பிடித்ததால் அந்த தளத்தில் இருந்தவர்களை மட்டும் காப்பாற்ற இயலாமல் 
போய்விட்டதாக தெரிகிறது.
அவர்கள் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் யார் என்றோ, எத்தனை குழந்தைகள் இறந்தனர் என்பதையோ பொலிஸ்
 செய்தி தொடர்பாளர் தெரிவிக்காவிட்டாலும், அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள், அந்த வீட்டில் வசித்தவர்கள் அகதிகள் என்றும், பெரும்பாலும் எரித்ரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் 
தெரிவித்தனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 22 நவம்பர், 2018

கால்நடைகளின் கொம்புகளுக்காக ஒரு வித்தியாச வாக்கெடுப்பு சுவிசில்

சுவிட்சர்லாந்தில் கால்நடைகளின் கொம்புகள் தொடர்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு வித்தியாச வாக்கெடுப்பு 
நடத்தப்பட உள்ளது.
Armin Capaul (67) என்னும் ஒரு தனி மனிதன் தொடங்கிய ஒரு போராட்டம், இன்று நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தப்படும் ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஆடு மாடுகளின் கொம்புகள் 700 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடான இரும்பு ஆயுதம் ஒன்றால் 
அகற்றப்படுவது வழக்கம்.
ஆனால் இதை எதிர்ப்பவர்கள், விலங்குகளின் கொம்புகள், அவற்றின் வளர்சிதை மாற்றம், சுகாதாரம் மற்றும் தங்களுக்குள் தகவல் தொடர்பு கொள்ளுதல் ஆகிய முக்கிய விடயங்களுக்கு உதவுகின்றன எனவே அவற்றை அகற்றக்கூடாது என்கின்றனர்.
இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு அது பட்ஜெட்டை பாதிக்கும் ஒரு விடயம், ஏனெனில் கொம்புள்ள கால்நடைகளை வைத்திருப்பதற்கு கொட்டகையில் அதிக இடம்
 வேண்டும்.
எனவே அவர்கள் கால்நடைகளின் கொம்புகள் அகற்றப்படக்கூடாது என்பதோடு, அவற்றை பராமரிப்பதற்காக உதவித் தொகையும் அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
கொம்புகளை அகற்றாத கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக விவசாய பட்ஜெட்டிலிருந்து ஒரு தொகையை ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை
 விடுக்கின்றனர்.
ஆனால் அரசு இதை எதிர்க்கிறது; கொம்புள்ள கால்நடைகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்கின்றார் விவசாயத் துறை அமைச்சர்.

இந்நிலையில் இது தொடர்பான வாக்கெடுப்பு ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. வாக்கெடுப்பில் மக்கள் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.