சுவிட்சர்லாந்தில் சூரிச் அட்லிஸ்விலில் பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக் கொண்டு, வங்கிக் கொள்ளையர்கள் இருவர் ஏராளமான பணத்தை அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை சூரிச் பகுதியிலுள்ள Adliswilஇல் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் நுழைந்த வங்கிக் கொள்ளையர்கள் இருவர் அந்த பெண் வங்கி ஊழியருக்கு கைவிலங்கிட்டு விட்டு கொள்ளைச்
சம்பவத்தில் ஈடுபட்டனர்.
காலையில் தனியாக வந்த அந்த பெண் ழியர் வங்கியை திறந்தார்.முகத்தை மறைக்கும் வகையிலான குளிர் தொப்பி அணிந்திருந்த இருவர்,
அவ்வழியே வந்தனர்.
அவர்களில் ஒருவர் குழந்தையை வைத்து தள்ளிக் கொண்டு வரும் தள்ளு வண்டி ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தார்.
சட்டென வங்கிக்குள் நுழைந்த அவர்கள், அந்த பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து, அவருக்கு கைவிலங்கு ஒன்றை மாட்டி, ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.
பின்னர் வங்கி லாக்கரைத் திறந்து ஆயிரக்கணக்கான ஃப்ராங்குகளை அள்ளிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம்
பிடித்தனர்.
அவர்கள் குளிருக்கான தொப்பியும் வெளிர் வண்ண கால் சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவித்த பொலிசார், தள்ளு வண்டியில் குழந்தைக்கு பதில் பொம்மை ஒன்றை வைத்திருக்கலாம்
என்று தெரிவித்தனர்.
அவர்கள் 35 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைபட்டவர்கள் என்றும் 180 சென்றிமீற்றர் உயரம் உடையவர்கள் என்றும் பொலிசார்
தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் நல்ல வேளையாக அந்த பெண் வங்கி ஊழியருக்கு அந்த கொள்ளையர்கள் எந்த காயமும் ஏற்படுத்தவில்லை.கொள்ளையர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக