வியாழன், 20 டிசம்பர், 2018

கடந்த சில ஆண்டுகளில் சுவிசில் புற்று நோயால் இறந்த பல ஆண்கள்

சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக டந்த சில ஆண்டுகளில் மரணமடைந்த ஆண்களில் பெரும்பாலானோர் புற்றுநோயால் இறந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 64,964 பேர் மரணமடைந்துள்ளனர். இது அதன் முந்தைய ஆண்டைவிடவும் 4 
விழுக்காடு குறைவாகும்.
ஆனால் இதில் முதன் முறையாக மரணமடைந்த ஆண்களில் பெரும்பாலானோர் புற்றுநோயால் இறந்துள்ளது ஆய்வில்
 தெரியவந்துள்ளது.
இருப்பினும் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் 17,808-ல் இருந்து 17,201 என சரிவடைந்துள்ளதாகவும் ஆய்வில் 
தெரியவந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு பெரும்பாலான இறப்புகள் காய்ச்சல் மற்றும் வெப்பக்காற்று காரணமாக நிகழ்ந்துள்ளது.
மட்டுமின்றி சுவிஸில் இருதயம் தொடர்பான இறப்புகள் கடந்த சில ஆண்டுகளாக குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள்
 சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் டிமென்ஷியா காரணமாக 3,975 பெண்களும் 1,789 ஆண்களும் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விடவும் 9 விழுக்காடு 
அதிகமாகும்.
சுவிட்சர்லாந்தில் ஆயிரம் குழந்தைகளில் 3.6 பேர் முதல் ஆண்டுக்குள் இறப்பதாகவும், 12,000 சிறார்களில் ஒருவர் தங்களது 16-வது வயதுக்குள் இறப்பதாகவும் ஆய்வறிக்கை 
சுட்டிக்காட்டியள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.