செவ்வாய், 25 டிசம்பர், 2018

அகதி அந்தஸ்து சுவிசில பெற்றவர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்

ஒருவர் பிறந்த தாய் நாட்டில்  தனக்கு உயிருக்கு ஆபத்து என்பதால் உயிர் தப்புவதற்காக உயிர்காப்பு கோரி சுவிட்சர்லாந்துக்கு
 வந்து அங்கு அரசியல் அகதிகளாக சட்டபூர்வமாக அகதி அந்தஸ்துக் கோரி சுவிஸ் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால்  உங்களுக்கு அகதி அந்தஸ்து  ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள்.
அகதி அந்தஸ்து கிடைத்ததும் அவர்களுக்கு B அடையாள அட்டை  கொடுக்கப்பட்டு அவர்களது சுவிஸ் நாட்டில் வாழும் அனைத்து தேவைகளையும் சுவிஸ் அரசே ஏற்றுக்கொண்டு அவர்களுக்குத் தேவையான கல்வி இருப்பிடம் மருத்துவக் காப்புறுதி மற்றும் 
குடும்பத்தாரை அவர்களது தாய்நாட்டில் இருந்து வரவழைத்து குடும்ப சகிதமாக வாழவைத்து ஒரு தொழிலைத் தேடும்வரை 
அனைத்தையும் சுவிஸ் 
அரசே கவனிக்கும்.
இப்படி இருப்பவர்கள் தங்களை நிலை நிறுத்தியதும் இவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது சுவிட்சர்லாந்தில் சட்டதிட்டத்திட்க்கு அமைய  அமைய அவர்கள் தங்களது தாய் நாட்டிற்க்கு போகமுடியாதவாறு அவர்களுக்கு தடை செய்யப்பட்ட போக்குவரத்து அனுமதி 
பயனப்பத்திரம் வழங்கப்படும்.
 அதையும் மீறி மாற்று வழிகளிலோ அல்லது இலங்கை அரச அல்லது வேறு வழிகளில் தொடர்பு என நிரூபிக்கப்பட்டால் அவர்களது அகதி அந்தஸ்து என்னும் சட்டப்பூர்வ உரிமையை அவர்கள் இழப்பார்கள் அத்துடன் அவர்களது அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு அவர்கள் அவர்களது தாய் நாட்டிற்க்கு நாடுகடத்தப் படுவார்கள்  என்பது சட்டம்.
ஆனால் இப்போது  இந்த சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது சுவிஸ் அரசு.அதாவது, இனி தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லும் அகதிகள், தங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய 
கட்டாயம்  இருந்தால் அதன் அவசியத்தை விவரித்து தாங்கள் தாங்கள் 
தங்களது தாய் நாட்டிற்க்கு போகவண்டிய அவசியத்தை வெளிப்படுத்தி அவர்கள் போய் வந்தால் .அவர்களது அகதி என்னும் சட்டப்பூர்வ உரிமையை அவர்கள் இழக்கமாட்டார்கள் என்னும் சட்ட மாற்றம் சுவிட்சர்லாந்தில்
 கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு அற்றுக் கொல்லப்பட்டு பாராளுமன்ற வாக்கெடுப்பில்  இந்த சட்டத்திற்கு ஆதரவாக 199 பேரும் எதிர்த்து 66 பேரும் வாக்களித்துள்ளனர்.எதிர்த்து வாக்களித்தவர்கள் conservative right Swiss People's Party என்னும் 
கட்சியினர் மட்டுமே.
அதிகளவான இலங்கையர்கள் அகதி என்னும் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்று அவர்களது அகதி அந்தஸ்து ஏற்றுக் கொல்லப்பட்டதும் அவர்களுக்கு B அடையாள அட்டை வழங்கப்பட்டு கடந்த ஆண்டுவரை 5 வருடங்களில் அவர்களுக்கு C அடையாள அட்டை வழங்கப்பட்டது அதாவது நிரந்தர வதிவுடமை  இவர்களுக்கு கிடைக்கும்.
இவர்களுக்கு நிரந்தர வதிவுடமை கிடைத்ததும் சுவிஸ் நாட்டின் நிரந்தர வதிவுடமை சட்டத்தினால் இவர்கள் உடனேயே தங்களது  அங்கீகரிக்கப்பட்ட அகதி அந்தஸ்தை நிராகரித்து மீண்டும் தங்களது தாய்நாட்டின் பாஸ்போர்டைப் பெற்று தங்களது தாய் நாட்டிற்க்கு
 அடிக்கடி போய் வருவார்கள்.
தற்போதைய இலங்கையின் சுமுகமன அரசியல் சூழ்நிலையால் அதனை மாற்றி சாதாரண சுவிட்சலாந்தின் வீ அனுமதி அட்டையைப் பெற்று பின்னர் இலங்கை கடவுச்சீட்டினையும் பெற்று இலங்கை சென்று வந்தனர்  இநத விடயம் சுவிஸ் குடி வரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்ததனால் சுவிஸ் அரசியல் வாதிகளால் இநத விடயம் பாராளுமன்றம் வரை சென்று இன்று சட்டரீதியானான்கீகாரம் கிடைத்துள்ளது.
இப்படியான  சட்டசிக்கல்களின் தயவால் அகதி அந்தஸ்து இழந்த பலருக்கு  Fவிசா வழங்கப்பட்டுள்ளது இனிமேல் இப்படிப்பட்ட நிலை இல்லாமல் போக பாராளுமன்றில் இநத சட்டம் இனிதே நிறைவேற்றப்பட்டுள்ளது உங்களுக்கு கிடைத்த ராஜ ஜோகம்.
இவ் அறிவிப்பின் சட்ட திட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்குமா  எனும் கேள்விகளிற்கு இன்னமும் வெளிப்படையாக தெளிவு படுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.