வியாழன், 7 மார்ச், 2019

சுவிட்சர்லாந்தில் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம்

வரும் மே மாதம் முதல் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.ஏற்கனவே நடைமுறையில் இருந்த Gleis/Voie 7 பயண அட்டைக்கு பதிலாக, seven25 என்னும் புதிய பயண அட்டை
 பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இப்போதிருக்கும் பயண அட்டையைப் போலவே இந்த seven25 பயண அட்டையும், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், சுவிஸ் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இரண்டாம் வகுப்பில் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆண்டு கட்டணத்தில்
 பயணிக்க அனுமதிக்கிறது.
முன்பு போலவே இந்த புதிய அட்டை பயன்படுத்துபவர்களும் நகர போக்குவரத்து வாகனங்களில் சிறப்பு இரவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் சில சர்ப்ரைஸ்களும்
 இருக்கின்றன.
முதலாவது, புதிய seven25 பயண அட்டை மூலம் இளைஞர்கள் பயணிப்பதற்கு அதிக ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முன்பு சில பேருந்து சேவைகளுக்கு, தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் புதிய அட்டையைக்
 கொண்டு பயணிகள் ஒரே அட்டை மூலமாகவே பேருந்து சேவைகளையும் பயன்படுத்த முடியும்.
இத்திட்டத்தில் ஒரே ஒரு குறை, ஆரம்ப கட்டணம் அதிகம் என்பதுதான். Gleis 7 அட்டையின் கட்டணம் ஆண்டொன்றிற்கு 129 சுவிஸ் ஃப்ராங்குகள்தான், புதிய seven25 அட்டையின் கட்டணமோ ஆண்டொன்றிற்கு 390 சுவிஸ் ஃப்ராங்குகள் (அல்லது மாதம் ஒன்றிற்கு 38 சுவிஸ்
 ஃப்ராங்குகள்) ஆகும்.
இந்த கட்டணம் அதிகம்தான் என்றாலும், இனி பயணிகள் புதிய இரவு பயண அட்டையை பெறுவதற்காக பாதி விலை பயண அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் பாதிவிலை அட்டை மற்றும் புதிய seven25 இரண்டிற்கும் சேர்த்து கட்டணம் 490 சுவிஸ் 
ஃப்ராங்குகள் ஆகிறது.
இன்னொரு விடயம், அடுத்த ஆண்டிலிருந்து இந்த புதிய அட்டை வைத்திருப்பவர்கள், ஜோக்கர் தினம் என்று அழைக்கப்படும் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தங்களுடன் இன்னொரு 16 முதல் 25 வயதுக்குட்பட்ட நபரையும் இலவசமாக 
அழைத்து வரலாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 28 பிப்ரவரி, 2019

பேர்ண் மாநில இலங்கைத் தமிழ் பெண் நகரசபை தேர்தலில் வெற்றி

சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான “எஸ்.பி” கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிட்டு நேரடியாக வெற்றிவாகை சூட்டியுள்ளார். 2014 ஆண்டு 
நடந்த தேர்தலில் 2003 ஓட்டுகள் பெற்றார், நேற்று நடந்த தேர்தலில், 2916 ஓட்டுகள் பெற்று மிக வெற்றிவாகை சூடினார். சுவிஸ் தூண் நகரசபையில் முதன்முதலாக வெற்றியீட்டிய முதல் தமிழ்ப்பெண் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு சுவிஸில் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். யாழ். புங்குடுதீவில் பிறந்து சிறுவயதிலேயே சுவிஸ் வந்து இங்கு படித்து பட்டம் பெற்று,$
 தற்போது சுவிஸின் “எஸ்.பி” எனும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியில் தூண் மாநில நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 6 பிப்ரவரி, 2019

சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை விரும்பும் சுற்றுலாப்பயணிகள்

சுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.
2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் 
கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
2017இல் 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்
வமற்ற செய்தி கூறுகிறது.
மொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.
சுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 2 பிப்ரவரி, 2019

தமிழர்களின் கொண்டாட்டங்களுக்கு சுவிசில் வர உள்ள நெருக்கடி

.
சுவிற்சர்லாந்தில் கடந்த காலங்களில் பல மாநிலங் noகளில் வாடகைக்கு மண்டபம் எடுத்து கொண்டாட்டங்கள் செய்வது வழமையாக காணப்பட்டது.
எனினும் இவ்வாறு கொண்டாட்டங்களுக்காக மண்டபங்களை வாடகைக்கு எடுப்பவர்கள் சரியான வகையில் அதனை கையளிக்க தவறுவதால் மண்டப உரிமையார்கள் இலங்கை தமிழர்களின் நிகழ்வுகளுக்காக மண்டபம் கொடுப்பதில்லை 
என முடிவெடுத்துள்ளனர்.
சூரிச், வேர்ன், வாசல், லுட்சர்ன், செங்காலன், துர்கவ், ஜெனீவா, லவ்சார் மற்றும் இன்னும் பல பிற மாநிலங்களும் உள்ள மண்டப உரிமையாளர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
காரணம் என்னவெனில் நிகழ்விற்காக பெற்ப்படும் மண்டபங்கள் சரியான வகையில் மீள கையளிக்கப்படாமையே ஆகும்.
அத்துடன் மண்டபம் பெறுபவர்கள் மது போதையில் மண்டப மேற்பார்வையாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதுடம் இந்த தீர்மானம் எடுக்கப்படுவதற்கான ஒரு காரணம் என தெரியவருகிறது. தற்போது ஒரு சில மண்டபங்களே வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இவையும் எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் திரைப்படங்களை காட்சிப்படுத்துவதற்கு கூட பல மண்டபங்கள் தடை விதித்திருப்பமை குறிப்பிடத்தக்கது.
சில வேளை இப்படி எழுதுவது சுவிற்சர்லாந்தில் உள்ள இலங்கையர்களிற்கு பிடிக்காமல் இருக்கலாம் இது எல்லாம் ஏன் செய்தியாக்க வேண்டும் என என்ற கேள்விகளும் வரலாம் அப்படியான சந்தேகத்தை தவிர்ப்பதற்காக விபரங்களுடன் விரைவில்
 ஆதாரம் வெளியிடப்படும்
உலகில் பழக்க வழக்கம் மற்றும் கலாச்சாரங்களில் உயர்வாக பார்க்கும் தமிழ் இனம் இன்று இந்த விடயங்களில் மதிப்பும் மரியாதையும் இழந்து வருவது உணர்வுள்ள தமிழனுக்கு மரியாதைக் குறைவாக உள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள் அடுத்த தலைமுறையையும் சரியான பாதையில் இன்றுள்ள பெரியவர்கள் வழிநடத்த தவறியுள்ளனர் என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 17 ஜனவரி, 2019

ஈழத்தமிழ் பெண் சுவிட்ஸர்லாந்தில் வாகன விபத்தில் மரணம்

சுவிட்ஸர்லாந்தின் Adlikon - Regensdorf Regensdorf பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் பெண் ஒருவர்
 அகாலமரணம் 
தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச்Regensdorf தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரும் அப்பள்ளியின் முதல்வரின் துணைவியாருமான திருமதி சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16.01.2019 பிற்பகல் பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.
அன்னாரின் நல்லடக்க திகதி பின்பு அறியத்தரப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அவரின் ஆத்மா அமைதிபெற பிரார்த்திப்போம்
தகவல்: குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 4 ஜனவரி, 2019

இனி சுவிஸ்சில் டார்ஜிலிங் மலை ரயில் வாரத்தின் எல்லா நாட்களிலும் சேவை

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மலை ரயில் நிலையம் ஒன்று மூன்றாவது முறையாக மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Junfraujoch ரயில்பாதை 1912ஆம் ஆண்டு போடப்பட்டது.
அந்த பாதை போடப்பட்ட முதலாண்டிலேயே 42,000 சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சாதனை படைத்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஐரோப்பாவிலேயே உயரமான ரயில் நிலையமான Jungfraujoch ரயில் நிலையத்திற்கு 1,067,000 சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளார்கள்.
பொதுவாக பனிச்சறுக்கு விளையாட்டிற்காகவே சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம் என்பதால், இம்முறை பனி குறைவாக இருந்ததால் பிரச்சினை இருக்கும் என்பதற்காக செயற்கையாக பனி உருவாக்கப்பட்டு அங்கு கொட்டப்பட்டது.
பனி குறைவாக இருந்ததால் கடந்த ஆண்டு பனிச்சறுக்கு விளையாடுவதற்காக மட்டும் மலை ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.9 சதவிகிதம் குறைந்தது.
ஆனாலும் ஐரோப்பாவின் உயரமான ரயில் நிலையத்தை சுற்றிப்பார்க்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள் ரயில் போக்குவரத்தை விரும்பியதையடுத்து 2017ஆம் ஆண்டு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை 
2.4 சதவிகிதம் உயர்ந்தது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>









புதன், 2 ஜனவரி, 2019

ஜனவரி மாதம்.2019. முதல் சுவிஸில் புதிய சட்டம் நடைமுறை

சுவிஸர்லாந்தில் புதிய ஆண்டு முதல் போக்குவரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
சமஷ்டி பேரவை நிறைவேற்றிய வாகன போக்குவரத்து திருத்தச் சட்டங்கள் ஜனவரி 1 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 
அமுலுக்கு வரவுள்ளன.
இதனடிப்படையில், மருத்துவப் பரிசோதனை, அடிப்படையான சாரதி பயிற்சி மற்றும் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்லல் தொடர்பில் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் புதிய சாரதிகள் அனைத்து வகையான வாகனங்களையும் ஓட்ட முடியும் என்பதே முக்கியமான மாற்றம். ( Automaten-Fahrer dürfen ab Februar schalten)
சாரதி அனுமதிப்பத்திரத்தில் எந்த வரையறையும் உள்ளடக்கப்பட மாட்டாது. பழைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்போர், போக்குவரத்து வரம்புகளை நீக்குவது தொடர்பில் வீதி போக்குவரத்து அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
போக்குவரத்து மருத்துவ சோதனை
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி மருத்துவ சோதனைக்கான வயது வரம்பு அமலுக்கு வரும். 75 வயதிலிருந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதுவரை, இந்த கடமை ஏற்கனவே 70 ஆண்டுகள் இருந்தன.
இதேவேளை, சமஷ்டி புள்ளவிபர அலுவலகத்திற்கு அமைய, சூரிச் பிராந்தியத்தில் 2017 ஆம் ஆண்டு தானியங்கி மற்றும் கைமுறையான எரிசக்தி நிரப்பும் மையங்கள் இருந்தன. புதிய போக்குவரத்து நடைமுறைகள் தானியங்கி மின்சார வாகனங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Blogger இயக்குவது.