செவ்வாய், 31 மே, 2016

சுவிசில் உலகிலேயே நீளமான சுரங்க வழி ரயில் பாதை திறப்பு விழா

சுவிஸ்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்த எதிர்வரும் யூன் 1ம் திகதி திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Carl Eduard Gruner என்ற பெருமைக்குரிய பொறியாளர் இந்த சுரங்க வழி ரயில் பாதை அமைப்பது தொடர்பாக திட்டங்களை வெளியிட்டார்.
இந்த ஆண்டில் தொடங்கிய திட்டப்பணிகள் 69 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது
Gotthard Base Tunnel என்ற பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி ரயில் பாதையின் நீளம் 57 கிலோ மீற்றர்கள் ஆகும்.
இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் உள்ள Seikan என்ற சுரங்க வழி ரயில் பாதை(53 கி.மீ) தான் உலகின் மிக நீளமான சுரங்க வழி ரயில் பாதையாக இருந்தது.
தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தயாராகியுள்ள இந்த சுரங்க வழி ரயில் பாதை அந்த பெருமைக்குரிய பெயரை பெற்றுள்ளது.
2,400 பணியாளர்களை கொண்டு சுமார் 12 பில்லியன் பிராங்க் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை ஐரோப்பிய நாடுகளில் ஒரு மிக்கியமான பாதையாக கருதப்படுகிறது.
சுவிஸின் Uri மாகாணத்தில் உள்ள Erstfeld என்ற பகுதியில் தொடங்கும் இந்த சுரங்க வழி ரயில் பாதை, Ticino மாகாணத்தில் உள்ள Bodio என்ற பகுதியில் நிறைவடைகிறது.
யூன் 1ம் திகதி நடைபெறவுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலண்டே, இத்தாலி பிரதமரான மேட்டோ ரென்ஸி ஆகிய தலைவர்களுடன் சுவிஸ் நாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் பங்கேற்க உள்ளனர்.
யூன் 1ம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கான சேவை அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

வெள்ளி, 13 மே, 2016

திடீர் மழையினால் சுவிஸ் சூரிச்சில் போக்குவரத்து பெரும் பாதிப்பு ?

இன்று சுவிஸ் சூரிச்சில் திடீர் பெருமழையால் லங்ராச  வீதிகளில்பெரும்வெள்ளம் ஏற்பட்டதனால்
பல  வீதிகள் வெள்ளக்காடாக உள்ளது இதனால் பல வீதிகள்வாகன போக்குவரத்திற்கு 
தடை   செய்யப்பட்டது இதனல் மக்கள் பெரும்சிரமத்துக்கு உள்ளாயினர்என்பது 
இங்கு குறிப்பிட தக்கது   நிழல படங்கள்  காணொளி    இணைப்பு   
சுவிஸ் நிருபர். ரி.. எல் 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>










திங்கள், 9 மே, 2016

ஒரே வீட்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் 4 பேர் கொடூரக் கொலை

சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரே வீட்டில் 4 பேர் கொடூரக் கொலை
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வீடு ஒன்றில் 4 பேர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீட்டை ஏலம் விட உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 48 வயதான தாய், அவருடைய 13 மற்றும் 19 வயதான இரண்டு மகன்கள் மற்றும் மூத்த மகனின் காதலியான 21 வயதான இளம்பெண் ஆகிய 4 பேரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் தந்தை வெளியே சென்றுருந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் 4 பேரின் உடல்களில் கேபில் கம்பிகளை சுற்றி கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளனர்.
பின்னர், இவர்கள் அனைவரும் விபத்தால் இறந்தது போல் வீட்டிற்கு தீயை வைத்துவிட்டு அவர்கள் தப்பியுள்ளனர்.
கொலையை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி பொலிசாருக்கு இதுவரை எந்த தகவலும் தெரியவரவில்லை.
இந்நிலையில், மரணத்திலிருந்து தப்பிய வீட்டு உரிமையாளர் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, ’எனது இரண்டு மகன்களை இழந்துவிட்டு இதே வீட்டில் என்னால் வசிக்க முடியவில்லை. மனைவி, மகன்களின் நினைவுகள் எனக்கு அன்றாடம் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, மோசமான நினைவுகளை சுமந்துள்ள இந்த வீட்டில் இனிமேல் வசிக்க விரும்பவில்லை என்றும், இதனை உடனடியாக ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் தான் அவர் வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்ததாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
‘என்னிடம் போதுமான பணம் இருக்கிறது. பணத்திற்காக வீட்டை நான் விற்பனை செய்யவில்லை’ என அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 2 மே, 2016

கொட்டும் மழையிலும் சுவிஸ் நாட்டில் நடைபெற்ற மே தினம்

சுவிஸ் – சூரிச் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகளாவிய ரீதியில் அதனை மக்கள் வெகு விமர்சையாக முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில், சுவிஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடனும், பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறும் தமது ஊர்வலத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
கொட்டும் மழையிலும் மக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 27 ஏப்ரல், 2016

பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்த புதிய சட்டம்: நன்மையா? தீமையா?

சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்தும் வகையில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என கவுன்சிலர் ஒருவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழில் செய்வதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. ஆனால், இதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதுமட்டுமில்லாமல், பாலியல் தொழிலாளிகளுக்கு அரசாங்கமே பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.
குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலாளிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தி வருவதால், பாலியல் தொழிலாளிகள் விளம்பரம் செய்வதற்கு, ‘மேக்-அப்’ செய்வதற்கு, அழகை மெருகூட்ட மருத்துவ சிகிச்சை செய்வதற்கு அரசு கட்டண சலுகைகளை வழங்கி வருகிறது.
இதுமட்டுமில்லாமல், சூரிச் நகரில் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு சாலையோரம் சிறிய அளவில் பல அறைகளை அரசாங்கம் அமைத்துள்ளது.
அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் பாலியல் பெண்கள் மட்டுமே இந்த அறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாலியல் தொழிலாளிகளுக்கு இத்தனை வசதிகள் உள்ளபோதிலும், அவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என 
கூறப்படுகிறது.
கடந்த 2013ம் ஆண்டு சூரிச் நகரின் மத்தியில் உள்ள சில பொது இடங்களில் நின்று வாடிக்கையாளர்களை அழைக்க கூடாது என அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்ததால், பாலியல் தொழிலாளிகள் நகரத்திற்கு வெளியே செல்ல வேண்டிய நிலை 
ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை சில ஆள் காட்டி நபர்கள் மூலம் கண்டுபிடிப்பதால், அவர்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் பாலியல் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சுவிஸின் SP கட்சியின் சூரிச் நகர கவுன்சிலரான Christine Seidler என்பவர் அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது, சூரிச்சில் பாலியல் தொழிலை அரசாங்கத்தின் செலவில் அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்கத்திற்கு அவர் கடந்த வாரம் ஒரு மனுவையும் அனுப்பியுள்ளார்.
சூரிச் மாகாண ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த மனுவிற்கு சம்மதம் தெரிவித்தால், இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால், சுவிஸ் மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
SVP எனப்படும் சுவிஸ் மக்கள் கட்சியின் கவுன்சிலரான Martin Gotzl என்பவர் பேசுகையில், ‘பாலியல் தொழிலை ஏற்று நடத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் முக்கிய பணிகளில் 
ஒன்று இல்லை.
அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தை செலவு செய்து பாலியல் தொழிலை அரசு நடத்த வேண்டும் என்பது ஒரு மோசமான முன்னுதாரனமாக ஆகிவிடும்’ என கருத்து தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 23 ஏப்ரல், 2016

.புகலிடம் கோரிய இலங்கையரின் தகவல்களை தர மறுக்கும் சுவிஸ்

.இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் சுவிட்ஸர்லாந்து சென்று அரசியல் புகலிடம் கோரிய 147 இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இலங்கை அரசுக்கு வழங்க சுவிஸ் அரசு 
மறுத்துள்ளது.
இலங்கையில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிகளே இந்த இலங்கையர்கள் அங்கு செல்ல வீசா அனுமதியை வழங்கியிருந்தனர்.
அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் இதில் இருப்பதாக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
வட பகுதி அரசியல்வாதிகள் மற்றும் கொழும்பில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இவர்களுக்கு அரசியல் புகலிடத்தை வழங்குமாறு பரிந்துரைகளை வழங்கியிருப்பதாக கொழும்பில் வெளியாகும் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெண் ஒருவர் கடவுள் பெயரை வைத்திருந்த வங்கிகணக்கைய் வங்கி முடக்கியது!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடவுள் பெயரை வைத்திருந்த பெண் ஒருவரின் வைப்பு கணக்குகளை வங்கி ஒன்று முடக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் லவ்சென் நகரை சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா ஏஜென்சி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் இவரது ஊழியர்களுக்கும் Postfinance என்ற வங்கி மூலமாக நிதிப் பறிமாற்றங்கள் நடைபெற்று வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மேலாளருக்கும் அவரது ஊழியர்களுக்கும் வரவேண்டிய தொகையானது மிகவும் தாமதமாகவும், சில நேரங்களில் வராமலும் முடக்கப்பட்டது மேலாளருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதற்கு வங்கி நிர்வாகிகளிடமே அவர் நேரடியாக விளக்கம் கேட்டுள்ளார். மேலாளரின் கேள்விக்கு பதிலளித்த வங்கி ‘மேலாளர் Isis Bihiry எனப் பெயர் வைத்திருந்ததால், அவர் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கருதி வங்கி கணக்கினை முடக்கியுள்ளதாக’ 
பதிலளித்துள்ளனர்.
மேலாளரின் Isis என்ற முதல் பெயரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பின் பெயரும்(ISIS) ஒரே மாதிரி இருப்பதால், இந்த குழப்பம் ஏற்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
Isis என்பது எகிப்து நாட்டு மக்கள் வணங்கி வரும் ஒரு பெண் கடவுளின் பெயர் ஆகும். மேலாளர் எகிப்து நாட்டை பூர்வீகமாக கொண்டதால், அந்த பெண் கடவுளின் பெயரை தனது முதல் பெயராக வைத்துள்ளதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மேலாளர் குழப்பத்திற்கான காரணத்தை விளக்கியுள்ளதால், அவருக்கும் அவரது ஊழியர்களுக்கும் சேர வேண்டிய தொகையை வங்கி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.