திங்கள், 21 ஏப்ரல், 2014

ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து கடத்தப்படும் பணம்

ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து பணத்தைக் கடத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள், அதிகரித்துக் கொண்டே போகின்றது.
சுங்க இலாகா அதிகாரிகள், சோதனையிடுகையில் ஜெர்மன்- சுவிஸ் எல்லைப் பகுதிகளில், இந்த பணக்கடத்தல் சம்பவங்கள் வெகுவாக இடம்பெற்று வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள புற பகுதிகளில், ஒரு நபருக்கு அனுமதிக்கப்பட்ட பணத்தொகை 10 ஆயிரம் யூரோக்கள் ( 12,200 பிராங்குகள் ஆகும்). அந்த விதிகளை மீறி, ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து பணத்தைக் கடத்திச் செல்கின்றனர்.
2013ம் ஆண்டில் 573 மில்லியன் யூரோக்கள் கடத்தப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பணக்கடத்தல்காரர்கள், மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகின்றனர். அவர்கள் ஒரு நாளில் நான்கு பேர்களாக ஜேர்மனிய - சுவிஸ் எல்லைப் பகுதிகளில் கார்களின் பிரயாணம் செய்கையில், ஒவ்வொரும் தங்களது, பர்சுகளில் 9,900 யூரோக்களை பணமாக வைத்துள்ளனர்.
அதிகாரிகள் அவர்களை சோதிக்கும்போது, அவர்களது அனுமதிக்கப்பட்ட லிமிட் ஆன 10000 யூரோக்களுக்கு கிழே இரப்பதால், எல்லைப் பாதுகாப்பில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகளால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க இயலுவதில்லை.
அவர்கள் சுவிஸ்- ஜேர்மன் எல்லையை எளிதாக பணத்துடன், கடந்து விடுகின்றனர்
 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.