வியாழன், 23 ஜனவரி, 2014

உலகின் பிரம்மாண்ட ஆடம்பர ஹோட்டல்



உலகின் தலைசிறந்த ஹோட்டலாக சுவிஸின் Grand Hotel Kronenhof என்ற நட்சத்திர ஹோட்டல் தெரிவாகியுள்ளது.
சுவிசின் பான்டிரிசீனா(Pontresina) பகுதியின், எங்கடைன்(Engadine) நீண்ட பள்ளதாக்கில் Grand Hotel Kronenhof நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது.
கடந்த 19ம் நூற்றாண்டில் புதிய பரோக் பாணியில் கட்டப்பட்ட இந்த ஆடம்பர ஹோட்டல் அருகில் பெர்னினா பனிப்பாறைகள் மற்றும் எங்கடைன்(Engadine) மலைகள் அமைந்துள்ளன.
இதில் 2,000 சதுர மீற்றர் அளவில் ஸ்பா ஒன்று புதுப்பிக்கப்பட்டு, மலையுச்சிகளை காணும் வகையில் நீச்சல் குளத்தோடு கட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள உள்ள ஆடம்பர சேவைகள் பெரும்பாலும் மக்களை கவர்ந்துள்ளதால் TripAdvisor என்ற பயண இணைதளத்தில் உலகத்தின் சிறந்த ஹோட்டல் என பெயர் பெற்றுள்ளது
.

வாடிக்கையாளர்களை கவர சுவிஸ் வங்கிகள் அதிரடி நடவடிக்கை

 வாடிக்கையாளர்களின் இரகசியங்களை காப்பாற்றுவதில் நெருக்கடிகளை சுவிஸ் வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இதன்பிரகாரம் சில புதுமையான சேவைகளை புகுத்துவதன் மூலம் பல நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டு வருகின்றன.

'பண கூரியர்' வசதி, பணம், தங்கம், கலைப்படைப்புகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருள்களை பாதுகாக்கும் வகையில் பெரிய உலோக அறைகள் கொடுப்பது ஆகிய சில யோசனைகள் திட்டமிடபட்டு வருகிறது.

மேலும் உலக பொருளாதார மன்ற ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளும் உலகின் பணக்காரர்களுடன் சுவிஸ் வங்கியாளர்கள் கலந்துரையாடவும் அதன் மூலம் உலக பணக்கார வாடிக்கையாளர்களைக் கவரவும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 

செவ்வாய், 21 ஜனவரி, 2014

50 ஆண்டுகளுக்கு பின்னர் தென்கொரியாவின் பாராட்டு மழையில் சுவிஸ்

 தென்கொரிய ஜனாதிபதி 50 ஆண்டுகளுக்கு பின்னர் சுவிஸ் நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 1963ம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை பற்றி சுவிஸ், தென்கொரியா கலந்துரையாடியது.

அதன்பின்னர் 50 ஆண்டுகள் கடந்து நேற்று தான் சுவிஸ் தென் கொரிய சந்திப்பு நடைபெற்றது.
தென் கொரிய ஜனாதிபதி தலைநகர் பேர்னில் இராணுவ மரியாதையுடன் வறவேற்கப்பட்டார்.
இவர் வருகை பற்றி வறவேற்பு உறையாற்றிய சுவிஸ் ஜனாதிபதி டிடியர் கூறுகையில், கண்டுபிடிப்பு மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டால் இணைக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் போட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுவிஸ் பற்றி தென் கொரிய ஜனாதிபதி கூறுகையில், சுவிஸ் நாடானது பல நோபல் பரிசுகள் பெற்று படைப்பாற்றலுக்கு ஆதாரமாய் உள்ளது என்றும் குறிப்பாக ஆராய்ச்சி, அறிவியல், மருந்து, சுற்றுலா துறை, மற்றும் கல்வி துறையில் சிறந்து விளங்குகிறது எனவும் பாராட்டியுள்ளார்.

 

திங்கள், 20 ஜனவரி, 2014

இந்தியாவுடன் சுவிஸ் விமான ஒப்பந்தம்

 சுவிஸின் பிலெடஸ் நிறுவனம் பயிற்சி விமானங்களை தயாரிப்பதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த 1939ம் ஆண்டு முதல் சுவிசின் ஸ்டான் நகரில் விமானங்களை தயாரித்து வரும் பிலெடஸ் நிறுவனத்தில் 1600 பணியாளர்களும், 100 பயிற்சியாளர்களும் பணியாற்றுகின்றனர்.
இந்நிறுவனம் இந்திய விமானப்படையின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உள்ள “சூலூர்” அசெம்பளிஸ் யூனிடிற்கு 106 விமானப் படை பயிற்சி விமானங்களை தயாரிப்பதற்க்கான உரிமங்களை அனுமதித்துள்ளது.

இதன்படி பிசி-7 மார்க்-2 என்ற விமானப்படை விமானங்களை தயாரிக்க உள்ளது.
இந்த பணி மும்பை டாட்டா நிறுவனத்தின் “அசெம்ப்ளி யூனிட்” மற்றும் ஐதாரபாத்தின் Tata advance systems என்ற துணை நிறுவனம் மூலமாக மேற் கொள்ளப்படவுள்ளது.
இதற்காக இந்தியாவின் TCS நிறுவனம் பொறியாளர்கள் பிலெடஸ் நிறுவனம் பணியில் ஈடுப்பட உள்ளனர்.

மேலும் பிலெடஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் இத்திட்டத்திற்காக சுவிஸிலிருந்து இந்தியாவிற்க்கு வருகை தந்து ஆதரித்துள்ளனர்.
 

சனி, 18 ஜனவரி, 2014

சுவிஸில் அதிகரிக்கும் ரயில் கட்டணம்

சுவிஸில் ரயில் கட்டணம் அதிகரிக்க கூடும் என ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் டோரிஸ் லூதர்ட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுவிஸ் இரயில் நிலையம் கூறுகையில் சுவிஸின் சூரிஜ் மாகாண ரயில் நிலையத்தில் இரயில்வே பாதைகளை அகலப்படுத்தும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக்காரணத்தால் ரயில்கள் தாமதமாக வருகின்றது என்றும் இக்கட்டுமான பணிகள் முடிவிற்கு வந்தபின்பு இனி சுவிசில் ரயில்கள் சரியான நேரத்தில் ரயில் நிலையத்தை வந்தடையும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே வரும் 2017ம் ஆண்டு ரயில் கட்டணம் உயரலாம் என எதிர்ப்பார்க்கபடுவதாக சுவிஸின் ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் டோரிஸ் லூதர்ட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில் கட்டுமான பணிகளின் தேவைகளை சந்திக்க நிதிபற்றாக்குறை இருப்பதால் அதனை ஈடுசெய்வதற்காக ரயில் பயணச்சீட்டுகளின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

செவ்வாய், 14 ஜனவரி, 2014

உலகின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு!

   சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடந்த விழாவில் உலகின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கடந்த வருடம் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ 69 கோல்கள் அடித்து

 சாதனை படைத்தார். மேலும், சுவீடனுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்தும் சாதனை படைத்தார். இந்த ஆண்டின் சிறந்த உலக கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்ட ரொனால்டோ, தனது மகன் கிறிஸ்டியானோவுடன் சேர்ந்து மேடைக்கு வந்து விருதை பெற்று கொண்டார்.   

அப்பொழுது மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அவர் அழுத நிலையில் கண்களை துடைத்து கொண்டு கூறுகையில், இந்த நேரத்தில் எதனை குறித்தும் விவரித்து கூற வார்த்தைகள் இல்லை என தெரிவித்தார். இவர் பார்சிலோனோவின் லயனல் மெஸ்சி மற்றும் பிரான்ஸ் நாட்டின் பிராங்க் ரைபரி ஆகியோரை

பின்னுக்கு தள்ளி இந்த விருதை அடைந்துள்ளார். மேலும், உலகின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக நாடின் ஆங்கரர் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பிபா தலைவர் ஜோசப் பிளாட்டர் மற்றும்
பிரேசில் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர் பீலே ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

சுவிஸ் நாட்டை கலக்கும் இலங்கை ??



இலங்கையை சேர்ந்த சுவிஸில் வாழும் தச்சர் ஒருவர் பாரம்பரிய சக்கரமில்லாத வண்டி(sledge) சறுக்குவண்டியை தயாரிக்கின்றார்.
கடந்த 1984ம் ஆண்டு தமிழ்கவிதை ஜெயபாலன் என்ற பெயர் கொண்ட இலங்கை தமிழர், இலங்கையில் உள்நாட்டு போர் நிகழ்ந்த போது தம் 20ம் வயதில் சுவிஸிஸ் குடிபுகுந்தார்.

சகோதரரின் அடைக்கலத்தில் இருந்த இவர் சுவிஸின் கிரவுபுடென் என்ற இடத்தில் சுர் என்னும் கிராமத்தில் வசித்து வந்தார். இவர் சுவிஸில் தச்சுவேலை செய்பவராய் பணிபுரிந்தார்.
இவர் ஜேர்மன் மொழியை நன்கு கற்றதோடு அதை பேசுவதிலும் எழுதுவதிலும் சிறந்து விளங்குகிறார்.

இவர் பணிபுரிந்த வந்த நிறுவனத்திற்கு பாரம்பரிய சறுக்குவண்டிகளை (sledge) வடிவமைத்து தயாரித்து கொடுத்து வந்தார். நாளடைவில் அந்த நிறுவனம் மூடப்பட்டதால் தானே சொந்தமாக தன்னுடன் 6 தச்சு தொழிலாளர்க்ளை சேர்த்து கொண்டு பாரம்பரிய சறுக்கு வண்டிகளை தயாரித்து
விற்பனை செய்துள்ளார்.

மிக அழகான வடிவத்துடன் தோற்றம் அளிக்கும் இச்சக்கரமில்லாத வண்டியை 490 பிராங்குகள் (540 டொலர்கள்) என விற்கின்றனர், எனினும் இவர்களுக்கு வண்டி ஒன்றிற்கு 25 பிராங்குகள் என்ற லாபம் மட்டுமே கிடைக்கின்றது.

இந்த சறுக்குவண்டிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் சுவிஸில் உள்ள மக்களிடமும் நல்ல வறவேற்பை பெற்றுள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் இதனை திருமணப்பரிசாக அளிப்பதற்கு வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து ஜெயபாலன் கூறுகையில், கடந்த 1990ம் ஆண்டு வீர்னி என்ற சுவிஸ் பெண்ணை மணம் முடித்து 30 வருடங்களாக சுவிஸில் சுபிக்‌ஷமாக வாழ்ந்து வருகின்றேன் என்றும் சுவிஸ் நாட்டின் மொழியை கற்றுக்கொள்வதும் குளிரும் தான் கடுமையாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.



 
Blogger இயக்குவது.