புதன், 9 நவம்பர், 2016

சுவிஸ் உடல் எடை அதிகரிப்பால் தவிக்கும் ஓர்சிலமக்கள் ஆய்வில் தகவல்!

சுவிஸ் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வறிக்கையில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 2,000 இளைஞர்களை இது தொடர்பாக ஆய்வு செய்ததில் 44 விழுக்காடு பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பெண்களை விடவும் ஆண்களே இருமடங்கு அதிக எண்ணிக்கையில் உடல் எடை அதிகரிப்பால் தவித்து வருவதாக
 கூறப்படுகிறது.
மட்டுமின்றி மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ள 5 பங்கு பழங்கள் மற்றும் சைவ உணவுகளை எடுத்துக்கொண்ட 13 விழுக்காட்டினர் இந்த சிக்கலில் இருந்து மீண்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ள உணவில் 3 முதல் 4 பங்கு பழங்கள் மற்றும் சைவ உணவுகளை எடுத்துக்கொண்ட நான்கில் ஒரு பங்கு மக்கள் அதிக உடல் எடை பாதிப்பில் இருந்து மீள்வார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜேர்மன் மற்றும் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகம் கொண்ட பகுதிகளில் 13-14 விழுக்காடு மக்கள் பழ வகையில் ஒருபகுதிக்கும் குறைவாகவும் காய்கறி உணவுகளையும் எடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை இலத்தீன் மொழி பேசும் மக்கள் அதிகம்கொண்ட பகுதியில் 22 விழுக்காடாக
 அதிகரித்துள்ளது.
லாசான்னே பல்கலைக்கழகம் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் ஆகியவை ஒன்றிணைந்து குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 8 நவம்பர், 2016

பாலியல் துஷ்பிரயோகம் செய்து மாடுகளை கொன்ற காமகொடூரன்!

சுவிட்சர்லாந்தில் இளைஞன் ஒருவன் இரண்டு மாடுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Fribourg மாகாணத்திலேயே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மாடுகளை கொன்ற குற்றத்திற்காக பொலிசார் 20 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று மாலை மாட்டு பண்ணையில் நுழைந்த இளைஞன் இரண்டு மாடுகளை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோம் செய்துள்ளான்.
இதைக்கண்ட உரிமையாளர் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குற்றவாளியை விரட்டி பிடித்துள்ளனர்.
இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாடுகளும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அவனுக்கு மனநலம் குறித்த சோதனை நடத்தப்படவுள்ளது.
ஏனெனில் 14 வயதில் சகோதரனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக சிறார் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவன் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 6 நவம்பர், 2016

உங்களுக்கு சுவிஸ் விசா வேண்டுமா? இந்த வழிமுறைகளை' பின்பற்றுங்கள்?

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது.
சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.
முதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும்
 நிறுவனம் அல்லது தனிநபர் அளிக்கும் அதிகாரப்பூர்வமான ‘அழைப்பு கடிதம்’(Letter of Invitation) அல்லது ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) ஆகிய இரண்டு கடிதங்களில் ஒன்றை உங்கள் தாய்நாட்டில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு கொடுக்க வேண்டும்.
அழைப்பு கடிதம்
சுவிஸில் உள்ள அந்த நிறுவனம்/தனிநபர் உங்களை அதிகாரப்பூர்வமாக அழைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
மேலும், அந்த அழைப்பு கடிதத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் சுவிஸில் தங்குகிறீர்கள்? என்ன நோக்கத்திற்காக 
தங்குகிறீர்கள்?
மேலும், எத்தனை முறை சுவிஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறீர்கள்? என்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்.
அதேபோல், இந்த கடிதத்தில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரை தொடர்புக்கொள்ளும் முகவரியும் உங்களுடைய முகவரியும் இடம்பெற வேண்டும்.
உதாரணத்திற்கு, குடும்ப பெயர், முதல் பெயர், பிறந்த திகதி, குடியுரிமை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும்.
மேலும், உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் கையெழுத்து மற்றும் அதன் திகதியும் இடம்பெற வேண்டும்.
முக்கியமாக, இந்த அழைப்பு கடிதம் சுவிஸ் நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக, சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான நிதி வசதிகள் உங்களிடம் இருப்பதை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் நிரூபிக்க வேண்டும்.
இதனை நீங்கள் வாங்கும் ஊதிய அறிக்கை அல்லது வங்கி இருப்பு அறிக்கை மூலம் அதிகாரிகளிடம் நிரூபிக்கலாம்.
இவ்வாறு இல்லாமல், உங்களுடைய அனைத்து செலவுகளையும் உங்களை சுவிஸ் நாட்டில் எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் ஏற்றுக்கொண்டால், அதனை அழைப்பு கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.
நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்
சுவிஸ் நாட்டிற்கு செல்ல உங்களிடம் போதுமான நிதி ஆதாரம் இல்லை என சுவிஸ் தூதரக அதிகாரிகள் சந்தேகம் அடைந்தால், அவர்களிடம் நீங்கள் ’நிதி ஆதரவு அறிவிப்பு கடிதம்’(declaration of sponsorship) அளிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
இந்த கடிதமான அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும். அதாவது, உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள உள்ளூர் அதிகாரி அல்லது மாகாண குடியமர்வு துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்றுருக்க வேண்டும்.
இந்த கடிதத்தில் கையெழுத்து போடுவதன் மூலம் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அங்குள்ள குடியமர்வு துறைக்கு 30,000 பிராங்க் வரை செலுத்த நேரிடும்.
காப்பீட்டு ஆவணம்
சில நேரங்களில் உங்களுடைய அல்லது உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபரின் காப்பீட்டு ஆவணத்தை சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த காப்பீட்டு கடிதமானது 30,000 பிராங்க் வரையிலான மருத்துவ செலவினங்களை ஏற்றுக்கொள்ளும்.
அதாவது, சுவிஸில் நீங்கள் தங்கியிருக்கும்போது உங்களுக்கு உடல்நலக்குறைவு காரணமாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அல்லது சுவிஸில் மருத்துவம் பார்க்கவும் மற்றும் விபத்து உள்ளிட்ட பிற சூழ்நிலைகளில் உங்களுடைய செலவினங்களை இந்த காப்பீடு ஏற்றுக்கொள்ளும்.
மேலே கூறிய இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றினால், விசா பெறுவதற்கான அடுத்த கட்டத்தை 
அடைய முடியும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 18 அக்டோபர், 2016

சுவிஸில் கொள்ளை கூட்டத்தின் தலைவன் கைது!!!

சுவிஸில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Fribourg மாகாணத்தின் bulle மாவட்டத்தில் 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சுவிஸ் நாட்டை சேர்ந்த 23 வயது இளைஞனை அதிரடியாக கைது செய்துள்ளனர். விசாரணையில் அவன் அப்பகுதியில் குடியேறிகள் போல் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
பொலிசார் அளித்துள்ள தகவலில், சோதனையில் பல திருட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், Bulle நகரில் கட்டிடங்கள் மற்றும் பல்வேறு கடைகளின் அடித்தளத்தில் 2015 மற்றும் பிப்ரவரி 2016 க்கும் இடைப்பட்ட காலத்தில் திருட்டப்பட்ட பொருட்கள் தெளிவுபடுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கைதுசெய்யப்பட்ட போர்த்துகீசிய மற்றும் மொராக்கோ நட்டை சேர்ந்த குடியேறி இளைஞர்கள் குறித்த கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 6 அக்டோபர், 2016

தமிழாசிரியர்களுக்கான பட்டயமளிப்பு விழா சுவிஸ்சில் இடம்பெற்றது!

சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச்சேவை இந்தியாவில் இயங்கி வரும் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து அயலகத் தமிழாசிரியர் பட்டயமளிப்பு விழா சுவிற்சர்லாந்தில் நடை பெற்றது.
பட்டயப் படிப்பினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டயமளிப்பு விழா கடந்த 10.09.2016ஆம் திகதி காலை 10.00 மணி முதல் சூரிச் ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக இப்பட்டயமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அணிவகுப்பு இசையுடன் அரங்கினுள் அழைத்து வரப்பட்டனர்.
தமிழ்மொழி வாழ்த்து, சுவிஸ் நாட்டுப்பண் தமிழ்த்தாய் வாழ்த்து, அகவணக்கம் என விழாவிற்குரிய அனைத்து அம்சங்களுடனும் ஆரம்பமாகிய இப்பட்டயமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களும் பட்டயப்படிப்பின் பயிற்றுனர்களாக பணியாற்றிய ஆசிரியர்களும் மலர்மாலை அணிவித்தும் நினைவுப்பரிசில்கள் வழங்கியும் 
மதிப்பளிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளுடன் பட்டயமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இப்பட்டயமளிப்பு விழாவினைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டிற்கான ஆசிரியப் பட்டயப் படிப்பின் ஆரம்ப விழாவும் 
நடைபெற்றது.
தங்கப்பதக்கம் பெற்ற தஸ்மினி ரட்ணராஜா வெள்ளிப்பதக்கம் பெற்ற சாம்பவி மோகனதாஸ் ஆகியோரோடு பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றுப் பட்டயம் பெற்ற அறுபத்து நால்வருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு அவர்களின் ஆசிரியப்பணி செம்மையுடன் திகழ அவர்கள் தொடர் கல்விகளையும் பட்டப் படிப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் என வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இப்பட்டயமளிப்பு விழாவில் SRM பல்கலைக்கழகத் தேர்வு ஆணையாளர் முனைவர் எஸ். பொன்னுச்சாமி அவர்களும் பேராசிரியர் இல.சுந்தரம் அவர்களும் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் தலைவர் திரு. சு. உதயபாரதிலிங்கம் உட்பட பலரும் கலந்து 
சிறப்பித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 4 அக்டோபர், 2016

இலங்கை தமிழர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல்!

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல் இருப்பதால் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள சுவிஸ் அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன.
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து இலங்கையில் மனித உரிமைகள் காக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சுவிஸில் இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் அளிப்பதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என சுவிஸ் அரசு கடந்த யூலை மாதம் அறிவித்தது.
ஆனால், புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும்போது அவர்கள் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக சுவிஸ் மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
சுவிஸில் தற்போது இலங்கையை சேர்ந்த சுமார் 50,000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். ஆனால், இவர்கள் அனைவருக்கும் புகலிடம் 
வழங்கப்படவில்லை.
இவ்வாறு புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் ஆலோசனை மேற்கொள்ள சுவிஸ் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga அடுத்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின்போது சுவிஸில் தமிழர்களுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாகவும், புகலிடம் மறுக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பாகவும் இரு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 17 செப்டம்பர், 2016

உலகிலேயே சுவிட்சர்லாந்து பசுமையான நகரத்தை கொண்டுள்ள நாடு!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரம் உலகிலேயே பசுமையான நகரங்களில் முதல் இடத்தை பிடித்து அந்நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Arcadis என்ற நிறுவனம் உலகளவில் பசுமையான 100 நகரங்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், சுவிஸில் உள்ள சூரிச் நகர் இந்த 100 நகரங்களில் முதல் இடத்தை 
பிடித்துள்ளது.
உலகளவில் பசுமையாக திகழும் முதல் 10 நகரங்களின் பட்டியல்:
சூரிச் (சுவிட்சர்லாந்து)
சிங்கப்பூர் (சிங்கப்பூர்)
ஸ்டாக்ஹோம் (சுவீடன்)
வியன்னா (ஆஸ்திரியா)
லண்டன் (பிரித்தானியா)
பிராங்க்பர்ட் (ஜேர்மனி)
சியோல் (தென் கொரியா)
ஹேம்பர்க் (ஜேர்மனி)
பிரேக் (செக் குடியரசு)
முனிச் (ஜேர்மனி)
இதே பட்டியலில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் 15-வது இடத்திலும், கனடாவில் உள்ள வான்கூவர் நகர் 23-வது இடத்திலும், அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகர் 26-வது இடத்திலும் 
உள்ளன.
இதே பட்டியலில் இந்தியாவில் உள்ள சென்னை 89-வது இடம் பெற்றுள்ளது. எனினும், இந்த பசுமையான 100 நகரங்களின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.