வியாழன், 4 டிசம்பர், 2014

அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பெண்மணி

 சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக நீதி அமைச்சரும் சோசலிச கட்சி உறுப்பினருமான Sommaruga என்பவர் தேசிய பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் பாராளுமன்றத்தில் புதன் கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படும் ஒராண்டு ஜனாதிபதி பதவிக்கு ஃபெடரல் கவுன்சிலில் இருந்த 7 உறுப்பினர்களில் ஒருவரான 54 வயதாகும் Sommaruga தெரிவாகியுள்ளார்.
அவர் மொத்தம் உள்ள 236 வாக்குகளில் 186 வாக்குகளை முன்னிலை பெற்று வெற்றி பெற்றதால் அடுத்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸில் உள்ள ஸக் என்னும் நகரில் பிறந்த Sommaruga, Aargau மண்டலத்தில் வளர்ந்துள்ளார். Fribourg பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற அவர், லூசெர்ன், கலிஃபோர்னியா மற்றும் ரோமில் பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
பின்னர் 1993ம் ஆண்டு, சுவிஸ் நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளையிலின் லாபி குழுவில் சேர்ந்துள்ளார்.
தற்போது ஜனாதிபதி பதவியில் இருக்கும் Didier Burkhalte பதவியிலிருந்து விலகிய பின், வரும் ஜனவரி 1ம் திகதி முதல் இவர் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.