சுவிட்சர்லாந்தில் உள்ள இஸ்ரேலிய வங்கி ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியை சிறப்பு பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
சுவிஸில் உள்ள Mizrahi-Tefahot என்னும் இஸ்ரேலிய வங்கியில் புதன் கிழமையன்று கொள்ளை முயற்சி நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி கூறப்பட்ட செய்தியில், நபர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்து கொள்ளையிட முயன்றதாகவும், ஆனால் சில பணியாளர்கள் அதனை தடுத்ததோடு உடனடியாக அலாரமை அடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சில பணியாளர்கள் தப்பித்து வங்கியை விட்டு வெளியே தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். அந்த நேரத்தில் வங்கி மேலாளருடன் அமர்ந்து பேசிய கொள்ளையன் பணம் தரும்படி மிரட்டியுள்ளான்.
ஆனால் பாதுகாப்பு படையினர் வந்ததை அறிந்த அவன், அவர்கள் வங்கிக்குள் நுழைவதற்குள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக