வெள்ளி, 26 டிசம்பர், 2014

நிவாரண பணிகளை மேற்கொள்ளும் சுவிஸ்




சுவிட்சர்லாந்தின் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு முகமை, வடகொரி்யாவிற்கு உணவு பாதுகாப்பு, மண் அரிப்பை சரிசெய்தல் மற்றும் சுத்தமான குடிநீரை அணுக ஒத்துழைப்பும் தனது பங்களிப்பையும் வழங்கி வருகிறது. வடகொரியாவிற்கு கடந்த 1995ம் ஆண்டில் இருந்து இந்த உதவிகளை சுவிஸ் அமைப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து முற்றிலும் மனிதாபிமான திட்டங்களை வடகொரியாவில் செயல்படுத்திவருகிறது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் பால் பவுடர் வழங்குவது மட்டுமல்லாமல், தண்னீர் விநியோகம், கழிவு நீர் மேலாண்மை போன்றவற்றிலும் உதவ முன்வந்துள்ளது. மேலும், மண் அரிப்பை தடுக்க சர்வான பகுதிகளில் மரங்களை நட்டுள்ளனர். இதன்மூலம் நிலையான உணவு கிடைக்க வழி செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.