வெள்ளி, 5 டிசம்பர், 2014

ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் சுவிஸ்!

 உலகின் சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், ஊழல் குறைந்து நாடுகள் பட்டியலில் சுவிஸ் உள்ளதாக தெரியவந்துள்ளது.
Transparency International எனப்படும் அமைப்பு நடத்திய இந்த கருத்துக்கணிப்பில், 2014ம் ஆண்டில் பொதுத் துறை ஊழல் எந்தெந்த நாடுகளில் எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
175 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை புதன் கிழமை வெளியிட்டுள்ளனர்.
இதில் ஊழல் குறைந்து காணப்படும் நாடாக டென்மார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து நியூசிலாந்து, ஃபின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் முறையே 2, 3 மற்றும் 4ம் இடங்களை பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் சுவிஸ் 5ம் இடத்தினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, பர்படாஸ், ஹொங்காங் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் 17ம் இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலின் கடைசி இரண்டு இடங்களை சோமாலியா மற்றும் வடகொரியா பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இதேப்போல நிதி வெளிப்படைத்தன்மை என்று வந்தாலும் சுவிஸே சிறந்த நாடாக விளங்குவதாக அந்த கருத்துகணிப்பு மேற்கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.