சனி, 11 ஜனவரி, 2014

பிரம்மாண்ட ஹொட்டல் கேள்விக்குறியில்


சுவிஸில் கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட ஹொட்டல் கட்டுவதற்கான பணிகள் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு சுவிஸின் லுசேன் நகரத்தில் 27 மாடிகள் கொண்ட மிகப்பெரிய ஹொட்டலை உயரமான கோபுரத்துடன் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

இதில் 200 அறைகள், மாடியின் மேல் ரெஸ்டாரண்டுகள், 80 வீடுகள் மற்றும் வாடகை குடியிருப்புகள் போன்ற பல பிரத்யேகங்களுடன் கட்டப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு ஆதரவளித்துள்ள மேயர் லுசேனின் கூறுகையில், இந்த அடுக்குபாடி கோபுரத்தின் உச்சியில் கட்டப்படும் ரெஸ்டாரண்டுகளிலிருந்து பார்த்தால் நகரின் எல்லைகள் முழுவதையும் விமானத்திலிருந்து காண்பது போல் தோற்றத்தின் காட்சிகளை கண்டுகளிக்கலாம்.

மேலும் ஜெனிவா சூரிசையும், ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தையும் ரசிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.
லுசேனில் முன்பே மூன்றாவது மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த பிரம்மாண்ட ஹொட்டலை கட்டுவதற்க்கு அனுமதி வழங்கப்படுவது மிகுந்த கேள்விகுறியாய் உள்ளது.
ஆதலால் வரும் ஏப்ரல் 13ம் திகதி இதற்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது மறுக்கப்படுமா என்பதை அறிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.

இதற்கு மொத்தம் 10,700 பேர் கையெழுத்திட்ட எதிர்ப்புகளை சேகரித்து வைத்துள்ளனர்.
பொது வாக்கெடுப்பின் போது குறைந்தபட்சம் 8,443 வாக்குகள் இருந்தாலே அந்த தீர்மானத்தை நிறைவேற்ற இயலும்.
எனவே கூடிய விரைவில் இவ்விடயத்திற்கு தீர்வு கிடைத்துவிடும் என நம்பப்படுகின்றது.
 

சுவிஸ் மருந்து நிறுவனத்தின் மீது பாயும் ஜப்பான்

சுவிசின் நோவார்டிஸ் என்ற மருத்துவ நிறுவனத்தின் மீது ஜப்பான் சுகாதார அமைச்சகம் குற்றவியல் புகாரை கொடுத்துள்ளது.

சுவிசில் இருக்கும் நோவார்டிஸ் என்ற மருத்துவ நிறுவனம் இரத்த அழுத்ததிற்காக அறிமுகம் செய்த புதிய மாத்திரையை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி மிகைப்படுத்த விளம்பரங்களை அளித்திருக்கிறது.
மேலும் ஜப்பான் நாட்டிலும் "டயோவின்" மருந்தானது விற்கப்படுகிறது, இது தவிர 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெறப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த மருந்தானது பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் "இந்த மருந்தை உட்கொள்பவருக்கு மார்புவலி மற்றும் பக்கவாதம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என்றும் பொதுவாக இந்த மருந்தானது எல்லா நோயாளிகளுக்கும் உகந்தது அல்ல எனவும் கூறியுள்ளனர்.

நோவார்டிஸ் மருந்துபொருட்கள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி “டேவிட் எப்ஸ்டின்” இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் சட்டத்தின்படி, எவர் ஒருவர் மிகைப்படுத்தபட்ட விளம்பரத்தின் கீழ் குற்றவாளியாக தீர்க்கப்படுகிறாரோ அவருக்கு 2 வருடம் சிறைவாசமோ அல்லது இரண்டு மில்லியன் அபராதமோ கட்ட வேண்டும்.
எனினும் இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

வியாழன், 9 ஜனவரி, 2014

பனிச்சரிவால் பலியான மலைவழிக்காட்டி

சுவிஸின் ஆல்ப்ஸ் மலை பகுதியில் மலையேருபவர்களை வழிநடத்தும் அனுபவமிக்க மலை வழிக்காட்டி ஒருவர் பனிச்சருக்கால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாகவே ஆல்ப்ஸ் மலையில் மோசமான வானிலையின் காரணத்தால் தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவங்கள் பலரின் உயிரை காவு எடுத்துள்ளது.

இச்சம்பங்களில் ஒன்றானது மலைவழிக்காட்டி சாமூவேல் மாத்தே என்பவரின் இறப்பு. 26 வயது நிரம்பிய சாமூவேல் மலையேருவதில் மிகுந்த திறமைவாய்ந்த அனுபவசாலி.
இவர் கடந்த 5ம் திகதி ஆறு பேர் கொண்ட குழுவை 2400 மீற்றர் உயரத்திலுள்ள பனிமலையில் வழிநடத்தி கொண்டு செல்கையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு இவருடன் சேர்ந்து மூன்று பேரை அடித்து சென்றது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் சாம்வேலும் ,இவருடன் வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
 

புதன், 8 ஜனவரி, 2014

வாடிகன் நகரில் மேலோங்கும் ஓரினச்சேர்க்கை



புனித தலமாய் கருதப்படும் வாடிகன் நகரம் ஓரினச்சேர்க்கைகளால் நிறைந்துள்ளது என முன்னாள் சுவிஸ் காவல் உறுப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 5ம் திகதி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல்லாண்டுகளுக்கு முன்னர் வாடிகனில் காவல் உறுப்பினராக இருந்தபோது பல முறை கார்டினல்களாலும், ஆயர்களாலும்,குருக்களாலும்,பிற அதிகாரிகளாலும் ஓரினச்சேர்க்கைக்கு தூண்டிவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 20 மதகுருக்கள் என்னை தூண்டிவிடும் நோக்கில் சில்மிஷ கோரிக்கைகளை விடுத்து ஓரினச்சேர்கையில் என்னுடன் ஈடுபட முயன்றுள்ளனர்.
இவ்வகை ஓரினச்சேர்க்கையாளர்கள் மதகுரு என்ற போர்வையில் மக்களை வழிநடத்துபவன் போல் போலி வேடமிட்டு பதவி வகித்தால், அது மக்களின் கடவுள் பக்தியை கெடுத்து, தேவலாயத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் பாழாக்க வழிவகுத்துவிடும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “திருமணத்திற்கு வெளியே செக்ஸ் வைத்துக்கொள்வது பாவம் ,விவாகரத்து செய்வது என்பது வன்மையான செயலாகும் என மக்களை நோக்கி கூறும் மதக்குருக்கள் ஓரினச்சேர்க்கைக்கு மட்டும் ஆதரவளிப்பது மிகுந்த வெறுப்பும் வேதனையையும் தருகிறது.
எனவே தற்போதைய வாடிகனில் போப்பாக பதவியிலிக்கும் போப்பும் இந்த ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இதில் ஈடுப்பட்ட யாரையும் மதகுருவாக நியமிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
 

சனி, 4 ஜனவரி, 2014

ஐரோப்பிய எழுச்சியுடன் சேர்ந்த சுவிஸ் பங்குச்சந்தை

2013ம் ஆண்டில் சிறந்த செயல்திறன் கொண்டிருந்த சுவிஸ் நாட்டின் பங்குகள் ஐரோப்பிய எழுச்சியுடன் சேர்ந்துள்ளது.

சுவிஸ் பங்குச் சந்தையிலுள்ள 6 பங்குச் சந்தைகள் தங்களது 20 நிறுவன பங்குகளை 20 சதவிகித லாபத்தை மேல்நோக்கி ஈட்டியுள்ளதால், சுவிஸ் பங்கு சந்தையில் சிறந்த செயல்திறன் கொண்டுள்ளது.
சுவிஸ் பங்குகளைப் போலவே இத்தாலியின் மிலன் (17 வீதம்), ஜெர்மனிய மேட்ரிட் (21 வீதம்) நல்ல நிலையில் உள்ளன.

அமெரிக்காவின் நியூயோர்க் பங்கு சந்தை 25 வீதத்திற்கு மேல் உள்ளது. 29 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. NASDAQ பங்குச் சந்தை சாதனையாக 37 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது.
சுவிஸ் பங்குச் சந்தையில் “ஆட்டோனியம்” நிறுவனத்தின் பங்குகள் 157 டொலருக்கு 2013ம் ஆண்டில் விற்கப்பட்டன.

சுவிஸ் சந்தையின் பங்குகள் நிதித்துறையிலும் சுகாதாரத் துறையிலும் உள்ள நிறுவனங்கள் நல்ல இலாபத்தை ஈட்டியுள்ளன.

மேலும், 2014ம் ஆண்டில் சுவிஸ் நாட்டின் பங்குகள் நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014ம் ஆண்டு இறுதியில் சுவிஸ் சுவிஸ் சந்தையின் குறியீட்டு எண் 9100 புள்ளிகளாக உயரும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

குப்பை குவியலில் பாம்பின் கூட்டம்

சுவிசின் குப்பை அகற்றும் ஆலை ஒன்றில் ஐந்து உயிருள்ள பாம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுவிஸின் சூரிஜ் மாகாணத்தில் குப்பை அகற்றும் ஆலையின் பெண் தொழிலாளி ஒருவர் பிளாஸ்டிக் பை ஒன்றில் ஐந்து பாம்புகள் உயிருடன் இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

அல்பேல்டெர்னில் உள்ள கழிவு அகற்ற தளத்தில் யாரோ ஒருவரால் இந்த பாம்புகள் நிறைந்த பிளாஸ்டிக் பை போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சூரிஜ் மண்டல பொலிஸ் அதிகாரி கூறுகையில் . ”இதில் எல்லா பாம்புகளும் நல்லாரோக்கியத்துடன் உள்ளது என்றும் இதை வளர்த்தவர்கள் தான் இதனை வெளியே விட்டிருக்கக் கூடும்” எனவும் கூறியுள்ளார்.

மேலும் இவ்வகை பாம்புகளின் நீளம் 1.8 மீற்றராகும். இவை வட அமெரிக்காவில் "கார்ன் பாம்புகள்" என அழைக்கப்படும் விஷதன்னமையற்ற பாம்புகள்.

இவைகள் பார்க்க கவர்ச்சியான தோல் அமைப்பை கொண்டவை மற்றும் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது.
 

புதன், 1 ஜனவரி, 2014

சுவிஸ் திரும்பிய மார்கே வெபர்

ஆர்க்டிக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கோ வெபர் சுவிஸர்லாந்து திரும்பியுள்ளார்.
கிறீன் பீஸ்ஸின் சுவிஸ் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெபர், ரஷ்யாவில் தனிச் சிறையில் இருந்து மிகவும் கடினமானதாக இருந்தாலும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டமை வருத்தத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்டமை ஆரம்பத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. சில வாரங்களின் பின்னர் அது சோர்வை ஏற்படுத்தியது என்றார்.
வெபர் கிறீன் பீஸ் நிறுவனத்தின் 30 செயற்பட்டாளர்களில் ஒருவர், டச்சு கொடியுடன் கூடிய ஆர்க்டிக் சன்ரைஸ் என்ற கப்பல் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரஷ்ய பாதுகாப்பு படையினர் கைப்பற்றப்பட்டது.
ரஷ்ய நாட்டின் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ரஷ்ய படையினர் கப்பலை கைப்பற்றியதுடன் அதில் இருந்தவர்களையும் கைது செய்தனர்.
மிக நீண்ட நாட்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு ரஷ்யா பொதுமன்னிப்பை வழங்கியது.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட வெபர், இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிகாரிகள் ஒரு தீர்வை தேடுகின்றனர்.
நாங்கள் குற்றவாளிகள் அல்ல. குற்றம் சுமத்தப்படாமல் எங்கள் மீதுதான நடவடிக்கைக்கு ஒரு வழியை அவர்கள் தேடினர் என்றார்.

அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட 28 வயதான மலையேறும் வீரர், ரஷ்யாவில் தாம் மோசமாக நடத்தப்படவில்லை என்றாலும் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பில்லாமல் இருந்து மிகவும் கடினமானதாக இருந்தது என்றார்.
ரஷ்யாவில் விடுதலை செய்யப்பட்ட வெபர், ரஷ்யாவின் சென்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இருந்து 50 மணித்தியால ரயில் பயணம் மூலமாக கடந்த திங்கட் கிழமை சுவிஸை அடைந்தார்.
 
Blogger இயக்குவது.