ஞாயிறு, 6 மே, 2018

தமிழ் மொழி பொதுத்தேர்வில் சுவிசில் 5300 மாணவர்கள் பங்குபற்றினர்


சுவிட்சலாந்து தமிழக் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ் n;மாழிப் பொதுத்தேர்வு 24வது ஆண்டாக, 05.05.2018ஆம் நாள் சுவிட்சலாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது.
இத்தேர்வில்pல் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள்
 தோற்றினர்.
பதினோராம் வகுப்புத்தேர்வில் 166 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 127 மாணவரக்ளும் தோற்றியமை சிறப்பாகும்.
தமிழக் ; கல்விச்சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநூல்கள் தாய்மொழிக்கல்வியில் தமிழக் ; குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது.
இத்தேர்வின்போது தமிழப்;பள்ளிகளின் முதல்வ்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளராகக் கடமை புரிந்தனர். குறிப்பாக, பழையமாணவர்கள் இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்துக் கொண்டனர். தமிழக்; குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக
 உள்ளது.
இவ் வாண்டு பதினோராம், பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வுகள் இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி இளங்கலைமாணி பட்டப்படிப்புக்கான தகமைத்தேர்வாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக் ; கல்விச்சேவை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ் மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இயற்கை உணவுகள் அதிவேக வளர்ச்சி சுவிட்சர்லாந்தில்

உணவுகளின் உற்பத்தி, கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக வேளாண்மை மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவிஸில் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் ஒன்று, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருள் என்று வேளாண்மைத்துறையின் மத்திய அலுவலகம்
 தெரிவித்துள்ளது.
2007ஆம் ஆண்டு 4.6 சதவித அளவில் இருந்த Organic உற்பத்தி, 2017ஆம் ஆண்டில் 9 சதவிதமாக அதிகரித்தது. அதே சமயம் விற்பனை விகித பங்கும், 6 சதவிதத்தில் இருந்து 11.5 சதவிதமாக உயர்ந்ததாக 
தெரிய வந்துள்ளது.
அனைத்து முட்டைகளிலும் Organic-யின் பங்கு, கடந்த ஆண்டு நான்கில் ஒன்றாக இருந்தது. இது அனைத்து வகை முட்டைகளிலும் 26.6 சதவிதம் ஆகும். மேலும், Organic காய்கறிகள் 23.1 சதவிதமும், Organic Bread 22.1 சதவிதமும் ஒட்டுமொத்த சந்தையில் 
பங்கு வகிக்கின்றன.
இதனால், கடந்த பத்து ஆண்டுகளில் சுவிஸின் Organic உணவு சந்தை 7.6 சதவிதம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துள்ளது. விற்பனையான Organic உணவுகளின் ஒட்டுமொத்த மதிப்பு 2007ஆம் ஆண்டில் 1.3 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டில் 2.7 பில்லியனாக உயர்ந்திருந்தது. இதில் வருடாந்திர தனிநபம் செலவு CHF171-யில் இருந்து
 CHF320 ஆகும்.
மிகப்பெரிய Organic விநியோகஸ்த அங்காடிகளான Migros மற்றும் Coop ஆகியவை முறையே, 33 மற்றும் 44 சதவித வளர்ச்சியை Organic உணவுகள் மூலம் பெற்றுள்ளன. அதே வேளையில், சிறப்பு அங்காடிகளில் இதனால் 5 சதவித அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் Liechtenstein-யில் சுமார் 6,906 organic பண்ணைகளை அளித்ததன் மூலம், மொத்தமாக 279 புதிய உற்பத்தியாளர்கள் organic சான்றிதழ் அடையாளத்தை 2017ஆம் ஆண்டில் பெற்றனர். இவற்றில் 6,423 பண்ணைகள் Bio Suisse சான்றிதழ் திட்டத்தின் கீழ் உள்ளன.
எனினும், அதிக விலை நிர்ணயம் Organic உணவுகளின் வேகமான வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கருதப்படுகிறது. இதனை சுவிஸின் விலை கண்காணிப்புக் குழு அதிகாரி Stefan Meierhans
 அறிந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், 'பத்து ஆண்டுகளுக்கு முன்பு எல்லாமே Organic ஆக தான் இருந்தன. இப்போது அவை சிறப்பு அடையாளத்தை பெற்றுள்ளன. அதனால் நீங்கள் அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியுள்ளது.
சில சமயங்களில் இது மிகவும் உயர்வான விலை என நான் நினைத்திருக்கிறேன். ஆனால், போதுமான அளவு தேவைப்படும் வரை சந்தைகளின் விதியாக இந்த விலை உள்ளது' 
என தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 5 மே, 2018

புகைப்பிடிக்க சுவிட்சர்லாந்தில் வரவிருக்கும் தடை உத்தரவு

சுவிட்சர்லாந்தின் Ticino மண்டலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகளின் வெளிப்புற பகுதிகளில் புகைப்பிடிக்க தடை விதிப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.
மண்டலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நடியா கிசோல்பி இது குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரியுள்ளார்.
அதாவது உணவகங்களின் வெளிபுறங்களில் இருக்கும் பகுதியிலேயே புகைப்பிடிக்கும் பகுதி மற்றும் புகைப்பிடிக்க கூடாத பகுதி என பிரிக்க வேண்டும் என்பது நடியாவின் வாதமாக உள்ளது.
நடியா கூறுகையில், முழுவதுமாக புகைப்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமல்ல, புகைப்பிடிக்காதவர்களை பாதுகாக்க வேண்டும் என கூறயுள்ளார்.
இந்த முடிவுக்கு புகையிலை எதிர்ப்பு சங்கத்தின் உறுப்பினர் தாமஸ் பியூட்லர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகங்களின் உள்ளே புகைப்பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாகவே தடை உள்ளது
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 26 ஏப்ரல், 2018

சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடு சுவிட்சர்லாந்து

மூன்றாவது முறையாக Boston Consulting Group வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டின் European Railway Performance Index அறிக்கையின்படி சுவிட்சர்லாந்து ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடாகத் தொடர்ந்து விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்துக்கு 7.2 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்தின் பயணிகள் ரயில் சேவை, அதிகப் பயன்பாடு, சேவைத்தரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கை 
தெரிவிக்கிறது.
டென்மார்க்(6.8 புள்ளிகள்), பின்லாந்து(6.6 புள்ளிகள்) மற்றும் ஜேர்மனியை(6.1 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளிய சுவிட்சர்லாந்து முன்பு இருமுறை முதலிடத்தைப் பிடித்தது போலவே இம்முறையும் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
பட்டியலின் கடைசியில் இருப்பது பல்கேரியா(1.9 புள்ளிகள்).
எவ்வளவு பயணிகள் எவ்வளவு முறை ரயில் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் கிட்டத்தட்ட முழு மதிப்பெண்கள் பெற்றாலும் தரத்தில் சற்றுக் கீழிறங்கியுள்ளது சுவிட்சர்லாந்து.
இந்த விடயத்தில் பின்லாந்தும் பிரான்ஸும் முந்திக்கொண்டன. இரண்டுமே 3.3க்கு இரண்டு புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து 1.8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.
பாதுகாப்பு விடயத்தில் டென்மார்க், லக்ஸம்பர்க், பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் சுவிட்சர்லாந்தைவிட சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளன.
இந்த நிலைக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ள சுவிஸ் ரயில்வே இந்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பாடுபடும் என உறுதி எடுத்துக் கொள்வதாக
 தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 19 ஏப்ரல், 2018

இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயம்

7
சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இலங்கையர்கள் பலர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பிற்பகல் 3.15க்கு  இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலாவுக்கு சென்ற இலங்கையர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று சுவிஸில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 சுற்றுலாப்பயணிகளை சென்ற இந்த பேருந்து, சூரிச்சின் வடக்குப்பகுதி அதிவேக வீதியில் வைத்து இரண்டு கனரக வாகனங்களுடன்
 மோதியுள்ளது
சம்பவத்தில் ஒருவர் கடுமையன காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 18 ஏப்ரல், 2018

ஈழ தமிழர் சுவிஸில் தேர்தலில் அமோக வெற்றி

சுவிட்ஸர்லாந்து தேர்தல் ஒன்றில் ஈழ தமிழர் ஒருவர் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக
 வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 15 ம் திகதி இடம்பெற்ற குறித்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அவர் இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
36 ஆசனங்களை கொண்ட குறித்த நகரசபைக்கு 140 இற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.
சோசலிசக் கட்சி சார்பில் குறித்த நகர சபைக்கு 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி ஐந்தாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது 
குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 4 ஏப்ரல், 2018

சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் சுவிசில் பலி

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த
 ஸ்பெயின் நாட்டவர்கள் மூவர் பனிச்சறுக்கு விளையாட்டின் போது பனிப்பாறைச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவர்களுடன் வந்த இருவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் Valais பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இன்னொரு பனிச்சறுக்கு குழுவினர் பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து பொலிசார் மீட்பு பணியில்
 ஈடுபட்டனர்.
பனிப்பாறைச் சரிவில் சிக்கிய ஐந்து பேரும் சமிக்ஞை கருவிகளை அணிந்திருந்ததால் மீட்பு குழுவினர் அவர்கள் இருக்கும் இடத்தை சற்று எளிதாக கண்டறிந்து இருவரை ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது.
என்றாலும் போதுமான வெளிச்சம் இல்லாததால் மூன்று பேரின் உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
உயிரிழந்தவர்கள் ஸ்பெயின் நாட்டவர்கள் என்பது மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய பொலிசார் அவர்களது தனிப்பட்ட அடையாளங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றின் காரணமாக பனிப்பாறைச் சரிவுகள் ஏற்படலாம் என்று Valais பொலிசார் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Blogger இயக்குவது.