திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சுற்றுலா வந்த பெண்மணி சாலையை கடந்தபோது நிகழ்ந்த விபரீதம்???

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வந்த கனடிய பெண்மணி ஒருவர் சாலையை கடக்கும்போது ட்ராம் வாகனத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் சூரிச் மண்டலத்தில் உள்ள Dubendorferstrasse நகரில் தான் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று பிற்பகல் வேளையில், 56 வயதுடைய கனடிய பெண்மணி ஒருவர் அதே பகுதியில் உள்ள சாலை...

பயங்கர விபத்து : காருக்குள்ளே இருவர் சாவு

இத்தாலி நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நிகழ்ந்த எதிர்பாராத பயங்கர விபத்தில் சிக்கிய 2 சுவிட்சர்லாந்து வீரர்கள் காருக்குள்ளேயே எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் உள்ள கார்லசோ என்ற நகருக்கு அருகில் ரோண்டே பாரெல்லி என்ற கார் பந்தயம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கார் பந்தயத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில்...

சனி, 22 ஆகஸ்ட், 2015

அ.சண்முகதாஸ் தகைசார் தமிழ்ப்பேராசிரியார்க்கு பவளவிழா

விட்சர்லாந்தின் சூரிச் நகரில் தகைசார் தமிழ்ப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களது 75  - வது அகவை நிறைவை முன்னிட்டு "பவளவிழா" நடைபெறவிருக்கிறது. சுவிட்சர்லாந்து தமிழ்ச்சங்கமும், தமிழ்க்கல்விச் சேவையும் இணைந்து நடாத்தும் இவ்விழா 22 ஆம் திகதி பிற்பகல் 15.30 மணியளவில் சூரிச் நகரில் நடைபெறவிருக்கிறது. பேராசிரியர் அவர்களின் தமிழ்சேவை தொடரவும்,...

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

புதிய கரன்ஸி நோட்டுகள்:சுவிஸ் சுக்கு வருகிறது தேசிய வங்கி அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டு மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மற்றும் அதிநவீன கரன்ஸி நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நாட்டு தேசிய வங்கி அறிவித்துள்ளது. சுவிஸ் தேசிய வங்கியான SNB கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  அதில், தற்போது பயன்பாட்டில் உள்ள 50 பிராங்க் கரன்ஸிற்கு பதிலாக அதிநவீன முறையில் தயாரிக்கப்பட்ட 50 பிராங்க் கரன்ஸி...

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

இடியுடன் பெய்த பலத்த மழை: மின்னலுக்கு பண்ணை வீடு சேதம்

சுவிஸில் வெப்ப சலனத்தால் பெய்த இடியுடன் கூடிய பலத்த மழையில் ஒரு பண்ணை வீடு மின்னலுக்கு இரையாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை 35 டிகிரி செல்சியஸ்க்கு இருந்த தட்பவெட்ப நிலையால் பலத்த பயல் வீச ஆரம்பித்தது. இதனால் புயல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிறு இரவு பெர்ன் மண்டலத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டை மின்னல் தாக்கியுள்ளது. இதில்...

வங்கி கொள்ளை: கொள்ளையனை வலை வீசித் தேடும் பொலிசார்

சுவிட்சர்லாந்தின் Aesch பகுதியில் அமைந்திருக்கும் தேசிய வங்கியில்தான் இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது. Aesch பகுதியில் அமைந்திருக்கும் தேசிய வங்கியில் சம்பவத்தன்று காலையில் கருப்பு உடையணிந்த ஒருவர் வங்கியில் நுழைந்து அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த அவன் அங்கிருந்த...

புதன், 5 ஆகஸ்ட், 2015

மர அமைப்பு சரிந்து விபத்து:பிரபல ஹொட்டலில் ஏராளமானோர் படுகாயம்

சுவிட்சர்லாந்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் நடந்த விபத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரோசா பகுதியில் உள்ள Metropol ஹொட்டலின் மரவேலைப்பாடுகள் நிறைந்த அமைப்பு திடீரென சரிந்து விழுந்துள்ளது. பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்த இந்த அமைப்பின் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்திருக்கலாம்...
Blogger இயக்குவது.