திங்கள், 30 டிசம்பர், 2013

தாமதமாக வருகை தந்த வெள்ளை கிறிஸ்துமஸ்

சுவிஸின் வடக்கு ஆல்ப்ஸ் பகுதியில் வசிப்பவர்களுக்கு பொதுவாக கிறிஸ்துமஸ் காலத்தில் அமையும் வெள்ளை கிறிஸ்துமஸ் இவ்வாண்டு சற்று தாமதமாகவே அமைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 26ம் திகதி ஆல்ப்ஸ் மலையின் வடக்கு பகுதியில் 20 முதல் 40 சென்டீமீற்றர்கள் பனியால் சூழப்பட்டது என RTS செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

“பாக்சிங் டே” என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் மறுநாளில் உயர்ந்த மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வெள்ளை கம்பளத்தை விரித்தது போல பனி படர்ந்து அழகாய் காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து தெற்கு இத்தாலிய பேசும் காண்டனில் ஒரு மீற்றர் தூரத்திற்க்கு பனி படர்ந்திருந்தது.

இதுகுறித்து பனிச்சரிவு ஆய்வாளர்கள் கூறுகையில், சுவிஸில் பனியின் தாக்கம் 120 செண்டிமீட்டராய் பதிவாகியுள்ளது. கடந்த 61 ஆண்டுகளாய் வரலாறு காணாத அளவில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதற்கிடையில் டிக்கினோவில் குறைந்த தட்பவெப்பத்தால் கிறிஸ்துமஸ் மற்றும் பாக்சிங் டே ஆகிய தினங்களில் பிற்பகல் வரை தொடர் கனமழை பெய்தது. இதனால் லுகானூ ஏரிக்கு அபாயம் உள்ளது என அறிவிக்கப்பட்டது.

இக்கனமழை புயலாக மாறி மத்திய சுவிஸ் பகுதி,வாயூத் என்ற மாவட்டம் மற்றும் சில நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. மேலும் ரயில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

வெள்ளி, 27 டிசம்பர், 2013

சுவிஸை உலுக்கிய புயல்காற்று

சுவிஸில் கடும் புயல்காற்று வீசியதால் நேற்றைய கிறிஸ்துமஸ் தினத்தில் மலைரயில் மற்றும் கேபிள்கார் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இக்கடும் புயல் ஐரோப்பாவின் மிக உயரமான ரயில்வே என்ற பெருமையை கொண்ட தலைநகரம் பேர்னில் இருக்கும் ”ஜங்க்ப்ராவ் இரயில் நிலையத்தில்” இரயில் பாதைகள் கடும் பாதிப்பிற்குள்ளானது.
இந்நிலையில் இங்கு ரயில் ஒன்று வீட்டின் மீது மோதி அவ்வீடு

 புயல் காற்றினால் தள்ளப்பட்டு ரயில் பாதையில் வந்து விழுந்தது.இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் மத்திய சுவிஸில் உள்ள சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பின்பு கிறிஸ்துமஸ் தினமான நேற்று சரி செய்யப்பட்டது.

இப்புயலின் தாக்கம் குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது, மத்திய சுவிஸில் புயல் காற்றின் சீற்றம் 208 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியது. பின்பு கிறிஸ்துமஸின் முந்தைய இரவு ரைன் பள்ளதாக்கில் 110 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியது.

மேலும் நேற்று குளிர்பனி படர தொடங்கியதால் புயல்காற்று நின்று உடனே மழையும் பனிப்பொழிவையும் ஏற்படுத்தியது. இதன் பின்னர் சுவிஸில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
 

புதன், 25 டிசம்பர், 2013

சுவிஸில் தஞ்சமடைய ரஷ்ய தொழிலதிபர் முயற்சி


ரஷ்யா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலதிபர் கோடோர்கோவ்ஸ்கி சுவிஸ் தூதரகத்தில் விசாவிற்காக விண்ணப்பித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த கோடோர்கோவ்ஸ்கி என்ற தொழிலதிபர் நிதிமோசடியில் ஈடுபட்டதால் ரஷ்ய அரசு இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனை தொடர்ந்து அடுத்த வருடம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படுவதாக இருந்த இவர் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புதினால் மன்னிக்கப்பட்டு கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார்.

இவரின் மனைவி மற்றும் இரட்டை மகன்கள் ஜேர்மனில் வசித்து வருகின்றனர். இதையடுத்து ஜேர்மன் சென்ற இவருக்கு ஜேர்மன் அரசாங்கம் ஒரு வருட காலமே தங்குவதற்கு அவகாசம் அளித்துள்ளது
இதனால் தன் சொத்துகளை சுவிஸ் வங்கியில் போட்டுவிட்டு குடும்பத்தினருடன் சுவிஸில் நிரந்தரமாக தங்குவதற்காக சுவிஸ் தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.
மேலும் தன் 10 வருட சிறைவாசத்தை குறித்து தான் மிகவும் வெட்கப்படுவதாகவும் பல வேதனைகளை அனுபவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 

தலைமறைவாகிய சுவிஸ் வங்கி நிறுவனர்

வரி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் வங்கியின் நிறுவனரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரான்சின் முன்னாள் வரவு செலவு திட்ட நிதியமைச்சர் ஜெரோம் ஆசாக்.
இவர் தன்னிடம் இருந்த ஏராளமான பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருந்தார்.
இதன் பின் பொலிசார் ரெய்டின் போது பணத்தை குறித்த நிறுவனர் Dominique Reyl என்பவரின் கணக்கில் மாற்றிவிட்டு, தான் தப்பிக்கும் வகையில் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சுவிஸ் வங்கியின் முன்னாள் பணியாளர் பியரி கோண்டமிரி மூலம் பிரான்ஸ் அரசியல்வாதிகளின் ரகசிய கணக்குகள் அம்பலமானது.

இதனையடுத்து Dominique Reyl மீது ஊழலுக்கு துணையாக இருந்தார் என்ற பெயரில் வழக்கு தொடரப்பட்டதுடன், கடந்த டிசம்பர் 11ம் திகதி மேஜிஸ்டிரேட்டால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

மேலும் விசாரணைக்கு வராமல், அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு கொடுக்காமல் இந்நிறுவனர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு தலைமறைவானதால் பொலிசார் இவரை பிடிக்கும் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

சனி, 21 டிசம்பர், 2013

பேச்சுரிமையை இழந்த பேச்சாளர்: சுவிஸ் தடாலடி

சுவிட்சர்லாந்தில் எகிப்திய போதகரின் கடுமையான சொற்பொழிவை கண்டித்து அந்நாட்டு அரசு, அவர் சொற்பொழிவாற்ற தடை விதித்துள்ளது.
 சில மாதங்களுக்கு முன்பு சுவிஸில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவர் ஆற்றிய சொற்பொழிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், இஸ்லாம் மதத்தை மறந்து அதன் நம்பிக்கையை துறக்கும் இஸ்லாமியர்களுக்கு மரண தண்டனையே உகந்த தண்டனையாகும் என தடாலடியாக அறிக்கையை விடுத்துள்ளார்.
இதனைதொடர்ந்து ”சுவிஸ் சூப்பர் லீகின்” மற்றும் ”பேசல் கால்பந்தாட்ட குழுவின்” முக்கிய கால்பந்தாட்ட வீரரான எகிப்திய வீரரையும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

ஆனால் இதுபோன்ற சொற்பொழிவுகள் இன்னும் தொடர்ந்தால் கலவரம் ஏற்பட பல வாய்ப்புகள் உள்ளது என்பதால் ஜெனிவாவில் கடந்த சனிக்கிழமையன்று நடக்கவிருந்த அவரின் மற்றொரு சொற்பொழிவு மாநாட்டை சுவிஸ் பொலிசார், கூட்டமைப்பு அலுவலகம் மற்றும் மத்திய இடம்பெயர்த்தல் அலுவலகம் தடை செய்துள்ளது.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

விலைமாதுக்களுக்கு அல்வா கொடுத்த மோசடி மன்னன்

 ஜெனிவாவில் 20க்கும் மேற்பட்ட விலைமாதுக்களிடம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் 3 மில்லியன் பிராங்குகளை மோசடி செய்துள்ளனர்.
ஜெனிவாவில் 40 வயது நிரம்பிய ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் மசாஜ் பார்லர்களில் வேலை செய்யும் பெண்களை குறிவைத்து தம் மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

இப்போலி ஆசாமி அப்பெண்களிடம் நிலம் மற்றும் சொத்துக்களை விற்பதாக கூறி போலி வரைபடங்கள், புராஜட்கள் மற்றும் பத்திரங்களையும் காண்பித்து இதற்கு முதலீடாக பணம் செலுத்த வேண்டும் என கூறி பணம்பரித்துள்ளான்.

ஆனால் RTS என்ற தொலைக்காட்சியின் அறிக்கையில் ”தனக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் நான் இதற்கு பொறுப்பேற்க இயலாது என அவர் கைவிரித்துள்ளார்.
இதனால் இவரிடம் ஏமாந்த பெண்கள் தங்கள் வாழ்வாதார சேமிப்பை இழந்துள்ளனர்.
மேலும் இப்பெண்களிடம் சுருட்டிய பணத்தையெல்லாம் இம்மோசடி மன்னன் செலவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

புதன், 18 டிசம்பர், 2013

லீலைமன்னனின் ஆட்டத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி

 சிறுமிகளை சீரழித்து வந்த நீதி மேலாளர் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெனிவாவை சேர்ந்த 64 வயது மதிக்கதக்க நீதிமேலாளர் ஒருவர், பட்டியலிட்டு கூறும் அளவில் பல சிறுமைகளை திட்டமிட்டு பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் நியான் மாநகராட்சியில் கிளாண்ட் என்ற இடத்தில் 11 வயது சிறுமியிடம் பழுது பார்க்க வந்த பணியாளை போல் நடித்து வீட்டினுள் நுழைந்து கத்தி முனையில் அச்சிறுமையை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து நீச்சல்குளத்தில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றபோதும் தண்டிக்கப்பட்டார்.

மேலும் கடந்தாண்டு மற்றொரு சிறுமியை பாலத்காரம் செய்ய முயன்ற போது கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் பெடோபைல் என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட இந்த 64 வயது மனிதர் தண்டனை காலம் முடியும் முன்பே உயிர் துறப்பார் என்றும் ஓன்லைன் தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
Blogger இயக்குவது.