அல்ஜீரிய விமான விபத்தில் சுவிஸை சேர்ந்த ஒரு பெண் பலியாகியுள்ளார் என்று அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் புர்கினா பாகோ தலைநகரிலிருந்து அல்ஜீரிய தலைநகருக்கு 116 பேருடன் பயணித்த AH5017 என்ற விமானம் கடந்த வியாழக்கிழமை மாலியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் பிரான்ஸ், புர்கினா பாகோ, லெபனான், அல்ஜீரியா, ஸ்பெயின், கனடா, ஜேர்மனி மற்றும் லுசம்பரிக் நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர்.
இதில் பயணித்தவர்களில் 51 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அதில் ஒரு சுவிஸை சேர்ந்த 30 வயதான பெண்ணும் பயணம் செய்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நியூசாடெலில் உள்ள லாசன்னே பல்கலைக்கழகத்தில் ஸ்பானிஷ் மற்றும் மத வரலாறு படிக்கும் மாணவி என்றும், அவரது டுவிட்டர் பக்கத்தில் உலகம் கலாச்சாரத்தாலும், கலாச்சாரம் உலகத்தாலும் கவரப்பட்டுள்ளது என்றும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக