ஞாயிறு, 20 ஜூலை, 2014

கறுப்பு பண முதலைகளுக்கு “செக்” வைக்கும் ஜெட்லி

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை பெற எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது, சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்கள் 700 பேரின் பெயர் பட்டியலை எச்.எஸ்.பி.சி. வங்கியிடம் இருந்து பிரான்ஸ் அரசு பெற்று, இந்தியாவிடம் ஏற்கனவே அளித்துள்ளது.
ஆனால் அப்பெயர்களை பகிரங்கமாக வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவை வழங்கப்பட்டன.அந்த இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது வருமானவரித்துறை நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றவுடனே, கறுப்பு பணத்தை மீட்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அக்குழு கேட்ட விவரங்களை எல்லாம் அளித்துள்ளோம். பதவி ஏற்றதில் இருந்தே, இந்த விடயத்தை சுவிஸ் அரசிடம் தீவிரமாக எடுத்துச் சென்று வருகிறோம்.
பொருளாதாரத்தை மீட்டு எடுக்க இன்னும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது.மேலும் பட்ஜெட்டை தாண்டி, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
மற்றைய செய்திகள்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.