புதன், 19 பிப்ரவரி, 2014

அபராதத்தினால் வெகுண்டெழுந்த பெற்றோர்


 சுவிசில் குழந்தைகளை பள்ளி விடுமுறை விடுவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுவிஸின் சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த ஒபர்லேண்ட் பகுதியில் வசித்து வரும் பெற்றோருக்கு இரு பெண் குழந்தைகள்.

இவர்கள் கடந்த 2012ம் ஆண்டில் கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றுள்ளனர்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகிகள் இவர்களை தொடர்பு கொண்ட போது இந்த ஒரு வார கால இடைவெளியில் தாங்களே தங்கள் குழந்தைகளுக்கு பாடம் புகட்டி கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை ஏற்க மறுத்த பள்ளி நிர்வாகம் குழந்தைகளின் பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்ததில் பள்ளி விதிகளை மீறிய குற்றத்திற்காக 1,600 பிராங்குகள் அபராதமும், சட்டவழக்கு அபராதமாக 1,100 பிராங்குகளும் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த பெற்றோர் சூரிச்சின் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அங்கும் இவர்ளது வழக்கிற்கு 2000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை சுவிஸ் உச்சநீதிமன்றத்தில் கொண்டு செல்ல இருப்பதாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.