திங்கள், 26 டிசம்பர், 2016

இலங்கை தமிழருக்கு சுவிஸில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை.?.

சிறீலங்காவின் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலையில் 2016ஆம் ஆண்டு மாத்திரம் அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இவ்விபத்தில் 117 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்தவகையில், அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் இதற்குள்ளேயே அடங்கும். இந்த விபத்தில் 10 அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்...

திங்கள், 19 டிசம்பர், 2016

சுவிஸில் புதிய சட்டங்கள் வர உள்ளன ?

சுவிஸில் வசிப்போர் பின்வரும் விடங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது தற்போது அவசியமாகியுள்ளது. குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறவும் பணி ஒப்பந்தமாக தங்கவும் வெளிநாட்டினர்களுக்கு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிப்படையில் சுவிஸில் குடியேறும் மற்றும் பணி ஒப்பந்தமாக தங்கும் வெளிநாட்டினர்கள் அவசியமாக சுவிஸ்...

வியாழன், 8 டிசம்பர், 2016

கணிதத்தில் ஐரோப்பியா நாடுகளில் சுவிஸ் மாணவர்கள் தான் கில்லியாம்!

ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தான் கணிதத்தில் புலி என்ற விடயம் ஆய்வில்  தெரியவந்துள்ளது. Organization for Economic Cooperation and Development என்னும் அமைப்பு சமீபத்தில் பள்ளி பாடங்கள் சம்மந்தமாக ஒரு ஆய்வை  மேற்கொண்டது. அதில், ஐரோப்பியா நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள்...

திங்கள், 5 டிசம்பர், 2016

குடியுரிமை வழங்கும் குழுவில் சுவிசில் ஈழத்தமிழ் பெண்மணி.

சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவுக்கு திருமதி. தர்ஷிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் தெரிவு  செய்யப்பட்டுள்ளார். மற்றும், தூண் நகராட்சியில் வாழும் சுவிஸ் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 18 வயது மேற்பட்டவர்களுக்கான...

புதன், 16 நவம்பர், 2016

சுவிஸ்சில் இருந்து ஒன்பது பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த 9பேர் மீளவும்   இங்கைக்கு  நாடுகடத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு நாடு கடத்தப்பட்டஇலங்கையர்கள் விபரம் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவகுமார் சிந்துஜன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பிரதஜா நிரோசன், புங்குடுதீவு ரஜீவன், லிந்துதாஸ் இனுவில்,...

புதன், 9 நவம்பர், 2016

சுவிஸ் உடல் எடை அதிகரிப்பால் தவிக்கும் ஓர்சிலமக்கள் ஆய்வில் தகவல்!

சுவிஸ் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வறிக்கையில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மொத்தம் 2,000 இளைஞர்களை இது தொடர்பாக ஆய்வு செய்ததில் 44 விழுக்காடு...

செவ்வாய், 8 நவம்பர், 2016

பாலியல் துஷ்பிரயோகம் செய்து மாடுகளை கொன்ற காமகொடூரன்!

சுவிட்சர்லாந்தில் இளைஞன் ஒருவன் இரண்டு மாடுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Fribourg மாகாணத்திலேயே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மாடுகளை கொன்ற குற்றத்திற்காக பொலிசார் 20 வயது இளைஞனை கைது செய்துள்ளனர். சம்பவத்தன்று மாலை மாட்டு பண்ணையில் நுழைந்த இளைஞன் இரண்டு மாடுகளை கொடூரமாக...

ஞாயிறு, 6 நவம்பர், 2016

உங்களுக்கு சுவிஸ் விசா வேண்டுமா? இந்த வழிமுறைகளை' பின்பற்றுங்கள்?

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது. சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். முதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும்  நிறுவனம் அல்லது தனிநபர்...

செவ்வாய், 18 அக்டோபர், 2016

சுவிஸில் கொள்ளை கூட்டத்தின் தலைவன் கைது!!!

சுவிஸில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. Fribourg மாகாணத்தின் bulle மாவட்டத்தில் 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சுவிஸ் நாட்டை சேர்ந்த 23 வயது...

வியாழன், 6 அக்டோபர், 2016

தமிழாசிரியர்களுக்கான பட்டயமளிப்பு விழா சுவிஸ்சில் இடம்பெற்றது!

சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச்சேவை இந்தியாவில் இயங்கி வரும் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து அயலகத் தமிழாசிரியர் பட்டயமளிப்பு விழா சுவிற்சர்லாந்தில் நடை பெற்றது. பட்டயப் படிப்பினை நிறைவு செய்தவர்களுக்கான பட்டயமளிப்பு விழா கடந்த 10.09.2016ஆம் திகதி காலை 10.00 மணி முதல் சூரிச் ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக இப்பட்டயமளிப்பு...

செவ்வாய், 4 அக்டோபர், 2016

இலங்கை தமிழர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல்!

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல் இருப்பதால் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள சுவிஸ் அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. இதனை...

சனி, 17 செப்டம்பர், 2016

உலகிலேயே சுவிட்சர்லாந்து பசுமையான நகரத்தை கொண்டுள்ள நாடு!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரம் உலகிலேயே பசுமையான நகரங்களில் முதல் இடத்தை பிடித்து அந்நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Arcadis என்ற நிறுவனம் உலகளவில் பசுமையான 100 நகரங்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், சுவிஸில் உள்ள சூரிச் நகர் இந்த 100 நகரங்களில்...

புதன், 7 செப்டம்பர், 2016

கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய மூவர் சுவிஸில் கைது!

சுவிஸில் பல கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். Bursins மாவட்டத்தில் உள்ள பல வீடுகள் புகுந்து திருடி வந்த பிரான்ஸ், மொராக்கோ மற்றும் அல்ஜீரிய நாட்டை சேர்ந்த மூன்று பேர் பிடிப்பட்டுள்ளனர். Denes பகுதியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான...

புதன், 17 ஆகஸ்ட், 2016

ரூபாய்.2.34 கோடி மதிப்புள்ள நகைகளை திருடிய பெண்!

  சுவிட்சர்லாந்து நாட்டில்  ரூபாய் 2.34 கோடி  மதிப்புள்ள நகைகளை திருடிய வேலைக்கார பெண்ணிற்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸில் உள்ள லூசேர்ன் மாகாணத்தில் பெண்களை வீடு வீடாக அனுப்பி சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் Obwalden மாகாணத்தை சேர்ந்த 50...

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

ஒரு உணவகம்:பரந்த வெளியில்சுவர்கள் இல்லை, கூரையும் இல்லை!

சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் நிறுவனம் ஒன்று கூரை எதுவும் இல்லாத பரந்த வெளியில் உணவம் ஒன்றை அமைத்து அசத்தி வருகின்றது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகாமையில் பிரபல ஹொட்டல் ஒன்று Zero Star உணவகம் என்ற பெயரில் இந்த நூதன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உணவகத்தின் சிறப்பு என்னவெனில் இங்கு சுவர்கள் இல்லை மட்டுமின்றி...

வாலிபரை கத்தியால் தாக்கி கொள்ளையிட்ட மர்ம நபர்கள்!

சுவிட்சர்லாந்து நாட்டில் கழிவறைக்கு சென்ற வாலிபரை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையடித்த இரண்டு மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். பேசல் மாகாணத்தின் Freiburgerstrasse என்ற பகுதியில் உள்ள கழிவறைக்கு 19 வயதான வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது, அறையின் வாயிலில் நின்று இருவர் திடீரென வாலிபர் மீது பாய்ந்து அவரை தாக்கியுள்ளனர். மேலும், இருவரில்...

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

குடியுரிமைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி?

எதிர்வரும் 2018 ஜனவரி 1-ம் திகதி முதல் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. தற்போது சுவிஸில் 12 ஆண்டுகளாக குடியிருக்கும் வெளிநாட்டினர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், 2018ல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் மூலம் சுவிஸில் 10 ஆண்டுகளாக குடியிருப்பவர்களும் குடியுரிமை பெற முடியும். எனினும், இவர்கள் C permit எனப்படும் நிரந்தர குடியிருப்பு...

புதன், 3 ஆகஸ்ட், 2016

சுவிஸ் விமானங்கள்அதிக விபத்துக்குள்ளாகின்றது !

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 2015 ஆம் ஆண்டும் மட்டும் சுவிஸ் பதிவு விமானங்கள் அதிக விபத்துகளில் சிக்கியுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது. சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 75 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பட்டியலிட்டுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த...

எதற்காக தெரியுமா ஜெனிவா ஏரியை கடந்து சாதனை படைத்த ஸ்பெயின் நபர்?

ஸ்பெயினை சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் ஜெனிவா ஏரியில் 83 கிலோ மீற்றர் தூரம் கடந்து சாதனை படைத்துள்ளார். Jaime Caballero எனபவர் ஸ்பெயின் நீச்சல் வீரர். இவர் பிரித்தானியாவின் Gibraltar கடல் பகுதி மற்றும் Ibiza தீவு பகுதியை நீச்சலடித்து கடந்து சாதனை படைத்தவர். இந்நிலையில் இவர் ஜெனிவா ஏரியில் 83 கிலோ மீற்றர் தூரத்தை 24 மணி நேரத்திற்குள் கடந்து 30 ஆண்டுகால...

வியாழன், 14 ஜூலை, 2016

இலங்கை குடிமக்களுக்குபுகலிடம் வழங்க கடும் கட்டுப்பாடுகள்:?

சுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு புகலிடம் வழங்க இனிமேல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு குடியமர்வு துறை அலுவலகம் அதிரடியாக  அறிவித்துள்ளது. சுவிஸ் குடியமர்வு துறை அலுவலகமான SEM சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு...

வியாழன், 7 ஜூலை, 2016

கழுகுக்கு புறாவை பலி கொடுத்த கொடூரனுக்கு அபராதம்?

சுவிட்சர்லாந்து நாட்டில் புறாவை திட்டமிட்டு கழுகுக்கு இறையாக்கிய நபருக்கு 11 மாதங்கள் சிறை தண்டனையும் 6 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிஸின் சூரிச் நகருக்கு அருகில் உள்ள Dielsdorf பகுதியை சேர்ந்த போலியான சமூக ஆர்வலர் மீதான குற்றம் தான் தற்போது  நிரூபிக்கப்பட்டுள்ளது. 42 வயதான இவர் சுமார் 200 புறாக்களை...

சனி, 2 ஜூலை, 2016

தமிழர் பண்பாட்டு உடையில் வந்து மாநகர சபையின் உறுப்பினர் திருமதி தர்ஷிகா

சுவிஸ்தமிழர் பண்பாட்டை மறந்து வாழ்வோர் மத்தியில் இவர் தமிழர் பண்பாட்டு உடையில் வந்து எமது பாரம்பரியத்தை வெளிக்காட்டியுள்ளார்.. சுவிசின் தூண் மாநகர சபையின் உறுப்பினராக திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் பிராத்ஹவுசில் நடந்த கூட்டத்தில் முதற் தடவையாக கலந்து கொண்டார். அப்போது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன், இன்றிலிருந்து எனக்கு வாக்களித்த மக்களுக்கு...

வியாழன், 30 ஜூன், 2016

சுவிஸில் புகலிடம் மறுக்கப்பட்ட அனைவரும்நாடுகடத்தப்படுகிறார்களா?

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் மீது அந்நாட்டு மாகாண அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள 26 மாகாணங்களிலும் சுயாட்சி நடைபெற்று வருகிறது. அதாவது, மாகாண அரசுகளின் உத்தரவின் அடிப்படையில் தான் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள்  எடுக்கப்படும். இதுபோன்ற ஒரு சூழலில், புகலிடம்...

வெள்ளி, 24 ஜூன், 2016

ஓட்டுனர் இல்லாத பேருந்து சுவிட்சர்லாந்து நாட்டில் அறிமுகம்

முதன் முறையாக சுவிட்சர்லாந்து நாட்டில் முதன் முதலாக தற்போது ஓட்டுனர் இல்லாத சிறிய ரக பயணிகள் பேருந்து சாலையில் பயணிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில் உள்ள Sion என்ற நகரில் தான் இந்த சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. மஞ்சள் நிறத்தில் இருக்கும் PostBus என்று அழைக்கப்படும் இந்த இரண்டு பேருந்துகள் ஒவ்வொன்றிலும் 11...
Blogger இயக்குவது.