புதன், 27 டிசம்பர், 2017

சுவிசில் ரயில் கட்டணங்கள் அடுத்தாண்டு குறைக்கப்படும்;

சுவிஸில் மதிப்பு கூட்டு வரிகள் குறைக்கப்படுவதன் விளைவாக ரயில் கட்டணங்களும் அடுத்தாண்டு குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரியானது 8லிருந்து 7.7 சதவீதமாக வரும் ஜனவரி முதல் குறைக்கப்படவுள்ளது, இதன் காரணமாக  யூன் மாதம் முதல் சுவிஸ் ரயில் பயண கட்டணங்கள் 0.3 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்படவுள்ளதாக நாட்டின் பொது போக்குவரத்து தொழில் சங்கம்...

சனி, 9 டிசம்பர், 2017

தொடர்வண்டி (TRAM) போக்குவரத்து சுவிஸ் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஆரம்பம்.

பாசல் மாநில போக்குவரவு சேவையான BVB நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாசல் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள ஜேர்மனியின் Weil am Rhein நகரின் தொடருந்து நிலையம் வரை Tram போக்குவரத்தை  விஸ்தரித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக பாசல் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் எல்லை நகரான St louis நகரின் தொடருந்து நிலையம் வரை தனது போக்குவரத்தினை...

வெள்ளி, 24 நவம்பர், 2017

ஈழத் தமிழர்கள் சுவிசில் இருந்து நாடுகடத்தப் படும் ஆபத்தில் உள்ளனர்!?

சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும்  அபாயம் எழுந்துள்ளது. சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய...

வியாழன், 23 நவம்பர், 2017

அகதியாய் வெளிநாட்டுக்கு 1985 ஆம் ஆண்டுகளில் வந்த தமிழர்கள் பட்ட துன்பங்கள்

1985 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு அகதியாய் வந்த தமிழர்கள் என்ன பாடுபட்டார்கள், அகதியாய் வந்தவர்கள் ஆரம்ப காலங்களில் எவ்வளவு கஸ்ரங்களுக்கு மத்தியில் மொழி தெரியாமல் வேலை தேடினார்கள், அகதி முகாம்களில் எப்படியிருந்தார்கள் என்பதையெல்லாம்  பிரதிபலிக்கும்  • நாட்டில இருந்து வெளிநாடு வந்தவர்கள் எவ்வளவு அழகாகவும், ஜடாமுடியுடனும் இருந்தார்கள்...

ஞாயிறு, 19 நவம்பர், 2017

மாவீர் 2017 க்கான இரு இறுவெட்டுக்கள் பாசெலில் வௌியிடப்பட்டது

பாசெலில்   நேற்றைய தினம் சுவிஸ் Basel lausen(18.11.2017) நகரில் நடைபெற்ற திரு. கலைப்பரிதி அவர்களின் வரிகளுக்கு திரு. இசைப் பிரியன் அவர்களின் இசையில் உருவான இரு இறுவெட்டுக்கலான, காந்தளின் கனவு மற்றும் புறப்படும் புதுயுகம் ஆகிய இறுவெட்டுக்கள்  வெளியிடப்பட்டுள்ளது, இதில் யேர்மனியிலிருந்து மாவீரரின் அண்ணர் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த...

வெள்ளி, 17 நவம்பர், 2017

மனித உரிமைகள் நிலைமைகள்பற்ரி சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு…சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிற்சர்லாந்தின் குடிவரவுக்கான பணியகத்தை மேற்கோள்காட்டி, சுவிஸ்இன்போ இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், “சிறிலங்காவில்...

வெள்ளி, 10 நவம்பர், 2017

சுவிசில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பயனுள்ள தகவல்

சுவிட்சர்லாந்தில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கான பயனுள்ள தகவல் இதுவாகும். Organization for Economic Cooperation and Development-ன் படி அமெரிக்கா, லக்சம்பெர்க்கை அடுத்து சுவிட்சர்லாந்தில் சம்பளம் அதிகம், ஏனெனில் ஐரோப்பாவை பொறுத்த வரையில் வாழ்வதற்கு அதிக விலையுயர்ந்த நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும். ஆண்- பெண்களுக்கு இடையேயான...

வியாழன், 19 அக்டோபர், 2017

சுவிஸ் மணமகளை திருமணம் செய்யவிருந்த இளைஞன் மரணம்!

இலங்கையின் தென்பகுதியான பேருவளையில் உயிரிழந்த இளைஞனின் உடற்பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது வாகன விபத்தில் உயிரிழந்த 26 வயதுடைய இளைஞனின் கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகிய உடற் பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த இளைஞர் அடுத்த மாதம் சுவிஸ்ட்சர்லாந்து பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைய ஆயத்தமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு அவர்...

சுவிசில் பலியான இளைஞனின் குடும்பம் சுவிஸ் வர அழைப்பு

சுவிட்ஸர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் அகதிகள் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கரன் என்பவர் அண்மையில் சுவிஸ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். மரணமானவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அவரின் குடும்பத்தினருக்கு சுவிஸ் அரசாங்கம் அ ழைப்பு விடுத்துள்ளது. முல்லைத்தீவை சேர்ந்த சுப்பிரமணியம்...

புதன், 27 செப்டம்பர், 2017

தனியாக சென்ற சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் காப்பாற்றினார்

சுவிட்சர்லாந்து நாட்டில் தனியாக சென்ற சிறுமியை கற்பழிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் துணிச்சலாக எதிர்கொண்டு விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Wattenwil நகரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன்  வசித்து வருகிறார். சில கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாடசாலைக்கு தினமும் சைக்கிளில் சென்று வந்துள்ளார்.இந்நிலையில்,...

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

சுவிற்சர்லாந்தின் பேர்ன் பெருநகர் ஈழமாக மாறியது

பொன்னார் மேனியன் புலித்தோலை அரைக்கிசைத்த பெருமான் பொன்நகர்  சுவிஸ்  பேர்ன் பெருநகர் தமிழ்  ஈழமாக காட்சி அளித்தது பேர்னில் சுவிற்சர்லாந்தில் அருட்பேரரசி ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரனாக செந்தமிழ்த்திருமறை கருவறையில் ஒலிக்க திருக்கோபுரத்தில் நால்வர் பெருமக்கள் எழுந்துநிற்க  அருளாட்சி புரிகிறான். சுவிற்சர்லாந்தின் பேர்ன்...

புதன், 9 ஆகஸ்ட், 2017

தமிழ் இளைஞன் ஒருவர் சுவிஸில் சுவிஸ் பிரஜை கத்தியால் குத்தி படுகொலை

சுவிஸ் நாட்டில் St-Gall மாநிலத்தில் வசித்த 22 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவர் சுவிஸ் பிரஜை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவமானது St-Gall மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த வெள்ளிகிழமை (04-08-2017) அன்று, St-Gall மாநிலத்தில் சன நடமாட்டம் உள்ள நகர் பகுதியில் (St gallen City, Market...

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சுவிஸ் வாழ் குடிமக்களுக்கு இப்படி ஒரு நிலையா?

சுவிட்சர்லாந்து நாட்டில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அதற்கான மருத்துவ பரிசோதனையை தவிர்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சுவிஸ் சுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்று அரசின் அனுமதியுடன் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால்...

புதன், 2 ஆகஸ்ட், 2017

சுவிஸ்சில்வாழும் இலங்கையர்களுக்கு இலங்கை அரசின் முக்கிய அறிவிப்பு!

சுவிசில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசாங்கம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. அதன்படி சுவிசில் உள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிக்கை  விடுத்துள்ளார். இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் Heinz Walker – Nederkoorn இன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர்  இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது...

செவ்வாய், 25 ஜூலை, 2017

வாளால் சுவிட்சர்லாந்தில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்: 5 பேர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் சவோகவுசன் (Schaffhausen) நகரின் மத்திய பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று வாளால் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜேர்மனி எல்லையில் அமைந்துள்ள சவோகவுசன் (Schaffhausen) நகரில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.(24.07.2017)? உள்ளூர் நேரப்படி காலை 10.39 மணியளவில் பொலிசாருக்கு குறித்த தகவல் தொடர்பில் தொலைபேசி...

வியாழன், 20 ஜூலை, 2017

எஸ்.பி கட்சி கோரிக்கை சுவிஸில் பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை?:

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் சுவிஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி கட்சி  முன் வைத்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி அந்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை. சுவிஸில் வசிக்கும் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவர் சுவிஸ் குடியுரிமை...

செவ்வாய், 11 ஜூலை, 2017

மனைவியின் பிரசவத்திற்கு கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியின் பிரசவகாலத்தின் போது கணவருக்கு ஊதியத்துடன் கூடிய 20 நாள் விடுமுறை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் வாக்கெடுப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், சுவீடன், போலந்து, பின்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மனைவியின் பிரசவகாலத்தின் போது கணவருக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கி  வருகின்றன. இந்த...

புதன், 5 ஜூலை, 2017

சூரிச் நகரில் ட்ராம் மீது சிறுமி மோதி பலியான துயரச்சம்பவம்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ட்ராம் வாகனம் மீது மோதி சிறுமி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள சூரிச் நகரில் தான் இத்துயர சம்பவம்  நிகழ்ந்துள்ளது. நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் சூரிச்சிற்கு அருகில் வசித்து வந்த 12 வயது சிறுமி ஒருவர் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். சில நிமிடங்களுக்கு பின்னர் Glattalbahn...

திங்கள், 19 ஜூன், 2017

சில இலங்கையர் சுவிஸ் வங்கியில் பதுக்கியுள்ள பணத்தால் ஆபத்து?

மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட பணத்தை பறிமுதல் செய்வதற்காக சுவிட்சர்லாந்து வங்கியுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை  ஏற்படுத்தவுள்ளது. இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (advertisement) அதற்கமைய விசாரணை மேற்கொள்ளல், வழக்கு தாக்கல் செய்தல், குற்றத்தை தடுத்தல் மற்றும் மோசடியான முறையில் சேமித்த...

வியாழன், 27 ஏப்ரல், 2017

உலகின் சிறந்த நாணயமாக சுவிட்சர்லாந்து நாணயம் தெரிவு!

சுவிட்சர்லாந்தின் 50 franc நாணயம் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயமாக தேர்வாகியுள்ளது. உலகின் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயம் எது என்ற போட்டியை International Bank Note Society நிறுவனம் சமீபத்தில்  நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளின் 18 விதமான நாணயங்கள் காட்சிக்கு வைக்கபட்டது. இதில் சிறந்த நாணயமாக சுவிட்சர்லாந்தில் 50 franc நாணயம்...

ஐம்பத்தைந்து ஆண்டுகள் சுவிஸில் வசித்த நபரைய்நாடு கடத்த அரசு உத்தரவு

சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்து 55 ஆண்டுகள் வசித்து வந்த நபர் ஒருவரை அவரது பெற்றோரின் சொந்த நாடான ஸ்பெயினிற்கு திருப்பி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள Freiburg நகரில் கடந்த 1962-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெற்றோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை வளர்ந்தது முதல் கல்வி பயின்றது, அலுவலக வேலைக்கு...

சனி, 8 ஏப்ரல், 2017

அதிகமாக சுவிஸில் வெளிநாட்டினர்கள் வசிக்கும் பகுதிகளின் விரிவான பட்டியல்

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறியுள்ள மற்றும் பணி நிமித்தமாக வசித்து வரும் வெளிநாட்டினர்கள் எந்த பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சுவிஸ் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், சுவிஸில் தற்போது 2,100,100 வெளிநாட்டினர்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டை ஒப்பிடுகையில்...
Blogger இயக்குவது.