திங்கள், 30 டிசம்பர், 2013

தாமதமாக வருகை தந்த வெள்ளை கிறிஸ்துமஸ்

சுவிஸின் வடக்கு ஆல்ப்ஸ் பகுதியில் வசிப்பவர்களுக்கு பொதுவாக கிறிஸ்துமஸ் காலத்தில் அமையும் வெள்ளை கிறிஸ்துமஸ் இவ்வாண்டு சற்று தாமதமாகவே அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் 26ம் திகதி ஆல்ப்ஸ் மலையின் வடக்கு பகுதியில் 20 முதல் 40 சென்டீமீற்றர்கள் பனியால் சூழப்பட்டது என RTS செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. “பாக்சிங் டே” என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் மறுநாளில்...

வெள்ளி, 27 டிசம்பர், 2013

சுவிஸை உலுக்கிய புயல்காற்று

சுவிஸில் கடும் புயல்காற்று வீசியதால் நேற்றைய கிறிஸ்துமஸ் தினத்தில் மலைரயில் மற்றும் கேபிள்கார் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இக்கடும் புயல் ஐரோப்பாவின் மிக உயரமான ரயில்வே என்ற பெருமையை கொண்ட தலைநகரம் பேர்னில் இருக்கும் ”ஜங்க்ப்ராவ் இரயில் நிலையத்தில்” இரயில் பாதைகள் கடும் பாதிப்பிற்குள்ளானது. இந்நிலையில் இங்கு ரயில் ஒன்று வீட்டின் மீது மோதி...

புதன், 25 டிசம்பர், 2013

சுவிஸில் தஞ்சமடைய ரஷ்ய தொழிலதிபர் முயற்சி

ரஷ்யா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலதிபர் கோடோர்கோவ்ஸ்கி சுவிஸ் தூதரகத்தில் விசாவிற்காக விண்ணப்பித்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த கோடோர்கோவ்ஸ்கி என்ற தொழிலதிபர் நிதிமோசடியில் ஈடுபட்டதால் ரஷ்ய அரசு இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து அடுத்த வருடம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படுவதாக இருந்த இவர் பின்னர் ரஷ்ய...

தலைமறைவாகிய சுவிஸ் வங்கி நிறுவனர்

வரி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் வங்கியின் நிறுவனரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரான்சின் முன்னாள் வரவு செலவு திட்ட நிதியமைச்சர் ஜெரோம் ஆசாக். இவர் தன்னிடம் இருந்த ஏராளமான பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருந்தார். இதன் பின் பொலிசார் ரெய்டின் போது பணத்தை குறித்த நிறுவனர் Dominique Reyl என்பவரின் கணக்கில் மாற்றிவிட்டு,...

சனி, 21 டிசம்பர், 2013

பேச்சுரிமையை இழந்த பேச்சாளர்: சுவிஸ் தடாலடி

சுவிட்சர்லாந்தில் எகிப்திய போதகரின் கடுமையான சொற்பொழிவை கண்டித்து அந்நாட்டு அரசு, அவர் சொற்பொழிவாற்ற தடை விதித்துள்ளது.  சில மாதங்களுக்கு முன்பு சுவிஸில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவர் ஆற்றிய சொற்பொழிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், இஸ்லாம் மதத்தை மறந்து அதன் நம்பிக்கையை துறக்கும் இஸ்லாமியர்களுக்கு மரண தண்டனையே உகந்த தண்டனையாகும்...

வெள்ளி, 20 டிசம்பர், 2013

விலைமாதுக்களுக்கு அல்வா கொடுத்த மோசடி மன்னன்

 ஜெனிவாவில் 20க்கும் மேற்பட்ட விலைமாதுக்களிடம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் 3 மில்லியன் பிராங்குகளை மோசடி செய்துள்ளனர். ஜெனிவாவில் 40 வயது நிரம்பிய ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் மசாஜ் பார்லர்களில் வேலை செய்யும் பெண்களை குறிவைத்து தம் மோசடியை அரங்கேற்றியுள்ளார். இப்போலி ஆசாமி அப்பெண்களிடம் நிலம் மற்றும் சொத்துக்களை விற்பதாக கூறி போலி வரைபடங்கள்,...

புதன், 18 டிசம்பர், 2013

லீலைமன்னனின் ஆட்டத்திற்கு ஓர் முற்றுப்புள்ளி

 சிறுமிகளை சீரழித்து வந்த நீதி மேலாளர் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெனிவாவை சேர்ந்த 64 வயது மதிக்கதக்க நீதிமேலாளர் ஒருவர், பட்டியலிட்டு கூறும் அளவில் பல சிறுமைகளை திட்டமிட்டு பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டில் நியான் மாநகராட்சியில் கிளாண்ட் என்ற இடத்தில் 11...

கொலைகுற்றத்தால் மனம் நொந்த காதலி

 சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் தன் காதலனை கொலை செய்த குற்றத்திற்காக வருந்துவதாக தொலைக்காட்சி செய்தி ஒன்றில் கூறியுள்ளார். சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் பிரான்சை சேர்ந்த தன் காதலரான வங்கியாளரை கடந்த 2005ம் ஆண்டு சுட்டு கொன்றுள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கு 8 அரை வருடம் சிறை தண்டனை விதித்து ஜெனிவா நீதிமன்றம் தீர்பளித்தது. அதில் ஏற்கனவே 4 வருடங்கள்...

திடீர் தீவிபத்து: சிரமத்திற்குள்ளான இருவர்

சுவிசின் சூரிச் மாகணத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் எல்லையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் இரண்டு பேர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஏற்பட்ட கட்டிட தீவிபத்தில் மூன்றுமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடியின் மேல் தீப்பற்றி கொண்டது. இதனால் ஏற்பட்ட புகையை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ...

பணம் கொழிக்கும் நிலத்தடி பாதுகாப்பு வர்த்தகம்

டெல் டாவிஸ் என்ற உயர் தொழிற்நுட்ப தகவல் விபரங்களை பாதுகாக்கும் நிலையம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையருகில் நிலத்தடி சுரங்கப் பாதையில் இயங்கி வருகின்றது. இந்த நிலையத்தில் பல நாடுகளை சேர்ந்த நபர்கள் சுவிஸ் வங்கிகளில் இரகசியமான வங்கி கணக்குகளை வைத்திருக்கும் விபரங்கள் மற்றும் இரகசிய தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்களை அதன் உரிமையாளர்களை...

வியாழன், 5 டிசம்பர், 2013

ஜேர்மனில் மரணங்கள் குறித்து ஆய்வு!

ஜேர்மன் நாட்டில் கிட்டத்தட்ட 750 பேர் வலதுசாரி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜேர்மனில் 1990 மற்றும் 2011ம் ஆண்டுகளில் 849 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் தற்போதைய புள்ளி விபரத்தின் படி 60 நபர்கள் வலதுசாரி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் இந்த தொடர்கொலைகளுக்கு...

திங்கள், 2 டிசம்பர், 2013

பணக்கார பட்டியலில் ‘காம்ப்ராட்’ குடும்பம்

சுவிட்சர்லாந்து நாட்டில் வெளியிடப்பட்ட பணக்கார பட்டியலில் காம்ப்ராட் குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது. சுவிஸ் வணிக இதழ் அந்நாட்டைச் சேர்ந்த 300 செல்வந்தர்கள் மத்தியில் அவர்களின் வருவாயின் அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சுவிஸ்நாட்டைச் சேர்ந்த இம்ராட் காம்ப்ராட்(74) என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். பல்வேறு வகையான தொழில்களை செய்து...
Blogger இயக்குவது.