சுவிட்சர்லாந்தில் எம்.பி ஒருவரின் நாற்காலியை திருடிய குற்றத்திற்காக நான்கு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுவிசின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் எம்.பியாக இருப்பவர் லொஹர் (52). இரண்டு கைகளையும் இழந்த இவர் நாற்காலியின் உதவியோடு தன்னுடைய அடிப்படை செயல்களை செய்துவந்தார்.
அந்த நாற்காலியானது 12,000 பிராங்குகள் விலையாகும், இந்நிலையில் இந்த நாற்காலி காணாமல்
போய்விட்டது, இதுகுறித்து தேடுதல் வேட்டை நடத்திய பொலிசார்,சுவிஸ் நபர்(16) மற்றும் போச்சுகீஸ் நபர்(17), ஜேர்மன் நபர் (20) மற்றும் துருக்கி நபர் (16) ஆகிய நான்கு பேர் சேர்ந்து இந்த நாற்காலியை திருடியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களை கைதுசெய்து செய்யப்பட்ட விசாரணையில், இச்சக்கர நாற்காலியை விற்கும் நோக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருடியதாகவும் பின்பு வேறு வழியின்றி வீதியில் விட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக