சனி, 22 மார்ச், 2014

சுவிஸ் புகழ் பாடும் சாரா பெர்க்சன்

இங்கிலாந்து இளவரசரின் மனைவியான சாரா பெர்க்சன் தனது உடல் எடையை குறைத்ததற்காக வெர்பியர் ரிசார்டை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
சாரா பெர்க்சன் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியாவார்.
இவர்களுக்கு 1996ம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டு பிரிந்துவிட்ட போதிலும் அவர்களது இரண்டு மகள்களுடன், குடும்பமாக வருடத்திற்கு ஒரு முறை சுவிட்சர்லாந்திலுள்ள வெர்பியர் (VERBIER) என்ற பெயருடைய மலைப்பிரதேச கோடை வாசஸ்த்தலத்திற்கு வந்து, தங்கள் விடுமுறையை இனிதே கழித்துவிட்டு செல்வார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த பழக்கத்தை கொண்டிருக்கும் இவர்கள் இந்த ஆண்டும் ரிசார்ட்டில் தங்கியிருக்கையில் பெர்க்சன் சுவிஸ் ஊடகவியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சுவிட்சர்லாந்து எனது இரண்டாவது தாயகம் என்றும் இங்குள்ள மக்கள் தன்னை மிகவும் வரவேற்று உபசரிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் நான் உலகசுகாதார கழகத்தின் தூதுவராக பணியாற்றுவதால், ஒரு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தினமும் நான்கு மணி நேரம் சுவிஸில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் இதனால் எனது உடல் எடை 20 கிலோ குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.