வெள்ளி, 14 மார்ச், 2014

சுவிஸின் கடிகாரத்தை காப்பி அடித்த அமெரிக்கா


சுவிசின் ஸ்வாச் நிறுவன கடிகாரம் போலவே போலி கடிகாரத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. சுவிசின் பிரபல கடிகார நிறுவனமான ஸ்வாட்ச் நிறுவனம் பிளாஸ்டிக்கில் “zebra” என்ற வரிக்குதிரை மாடல் கடிகாரமும் மற்றும் பல நிற மாடல் கடிகாரங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இதே போன்ற பிளாஸ்டிக் கடிகாரங்களை அமெரிக்காவில் இரண்டாம் இடம்

வகிக்கும் பிரம்மாண்ட நிறுவனமான ‘Target’ தரக்குறைவான பிளாஸ்டிக்கை கொண்டு வாட்சுகளை தயாரித்து விற்பனை செய்கின்றது. இ்தையறிந்த ஸ்வாட்ச் தங்களின் நிறுவனத்தின் மதிப்பீடு குறைந்துவிடும் என உணர்ந்ததால் டார்கேட் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து டார்கேட் நிறுவனத்தின் பேச்சாளரான ஈவான் லாப்சிகா மற்ற நிறுவனத்தின் அறிவுசார்ந்த சொத்துரிமைகளை தாங்கள் மதிப்பதாக கூறி மறைமுகமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.