வியாழன், 20 மார்ச், 2014

பரிதாப நிலையில் சுவிஸ் வாக்காளர்கள்

சுவிசில் பெரும்பாலான வாக்காளர்கள் குறைந்தபட்ச மாத ஊதிய திட்டத்தை ஆதரித்துள்ளனர்.
சுவிசில் 3,30,000 தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு 4,000 பிராங்குகளுக்கும் குறைவான ஊதியத்தையே பெற்று வருகின்றனர்.
தற்போது சுவிஸ் விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதால், ஊதியத்தையும், விலைவாசியையும் ஒப்பிட்டு பார்க்கையில் போதுமான ஊதியம் இல்லாததாக வாக்காளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான வாக்காளர்கள் குறைந்தபட்சமாக 4000 பிராங்குகள் (4580 டொலர்கள்) மட்டுமே தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாய் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆதரித்துள்ளனர்.

இத்திட்டம் வரும் மே 18ம் திகதி அரசினால் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் இத்திட்டதால் சிறிய நிறுவனங்கள், சில்லரை வணிக நிறுவனங்கள், உணவு பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் விவசாய தொழில்களை பராமரிக்கும் நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த குறைந்த பட்ச ஊதியத்திட்டத்தை கண்டித்து சுவிஸ் அரசாங்கமும், நாடாளுமன்றமும் எதிர்ப்பு கொடிகளை ஏந்தியுள்ளன.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.