வெள்ளி, 14 மார்ச், 2014

சுவிஸில் குதிரை இறைச்சிக்கு 'செக்'

சுவிசில் குதிரை இரைச்சியை விநியோகம் செய்வதை சூப்பர் மார்கெட் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
சுவிசில் தள்ளுபடி விலையில் குதிரை இரைச்சியை வியாபாரம் செய்யும் ‘Denner’ என்ற சூப்பர்மார்கெட் நிறுவனம் ஒன்று உள்ளது.
இந்நிறுவனம் காயமடைந்த மற்றும் உடல்நிலை சரியில்லாத குதிரைகளை பிற நாடுகளிலிருந்து, அழைத்து வந்து இரைச்சிகளாக்கி விற்பனை செய்வதாக விலங்கு உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் குற்றம் சாட்டப்பட்ட டெனர் நிறுவனம், தற்போது வியாபாரத்தை நிறுத்தியதுடன், இனி விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய சான்றிதழ் முறைகள் அறிமுகமான பின்பு வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி் விற்பனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் சுவிசில் ஆண்டு ஒன்றிற்கு இறக்குமதி செய்யப்படும் 5000 டன் குதிரை இரைச்சியில் சுமார் 50 சதவீதம் மட்டும் சுவிஸ் நாட்டு மக்களால் உட்கொள்ளப்படுகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.