ஞாயிறு, 2 மார்ச், 2014

ஆபாச படம் பார்த்த ஆசிரியர்: அதிர்ச்சியில் மாணவர்கள்

சுவிசில் ஆசிரியர் ஒருவர் ஆபாச படங்களை வகுப்பறையில் பார்த்த குற்றத்திற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள வர்த்தக மேலாண்மை பள்ளியில் கடந்த 24ம் திகதி ஆசிரியர் ஒருவர், வகுப்பறையில் ஆபாச படங்கள் மற்றும் கை, கால் வெட்டப்பட்டு நிர்வாண நிலையிருந்த பெண்ணின் புகைப்படத்தையும் தனது கணணியில் பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இப்படங்கள் புரொஜக்டரின் மூலம் வகுப்பறையிலிருந்த கரும்பலகையில்(Black board) ஒளிப்பரப்பாகியதை கண்ட மாணவர்கள் திகைத்து போயினர்.

இதுகுறித்து நிர்வாகி ரெனி போர்டினீர் கூறுகையில், இச்செயலை ஆசிரியரே செய்ததாக ஒப்புக்கொண்டது தனக்கு பேரதிர்ச்சியாய் உள்ளது.
மேலும் இக்குற்றத்திற்காக தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஆசிரியர் தன் 40 வருட பள்ளி வாழ்க்கையில் தவறு ஏதும் புரியாததால், நடவடிக்கை எடுப்பது பற்றி மாணவர்களும், துணைத்தலைவரும் கலந்து ஆலோசிக்க உள்ளனர் என கூறியுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.