சனி, 22 மார்ச், 2014

சாதனை படைக்க துடிக்கும் உள்ளம் (காணொளி)

 சுவிசில் செயற்கை விமானத்தை உருவாக்கி அதை விண்வெளியின் முனையில் ஏவுவதற்கு பிரபல தொழில்நுட்ப வல்லுநர் ரபெல் திட்டமிட்டுள்ளார். சுவிசில் ஹைட்ரஜன் நிரப்பபட்ட செயற்கை விமானத்தை ரபெல் அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாதாரண விமானத்தை காட்டிலும் பல மடங்கு தூரம் செல்லும் அளவிற்கு சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. சுமார் 10,000 முதல் 15,000 மீற்றர் உயரத்தில் செல்லும் இவ்விமானத்தில் பயணிக்க எண்ணுவோர் 50,000 பிராங்குகள் செலுத்தி

பயணிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு தகுந்த சகாசக்காரர்கள் தேவைப்படுவதாக ரபெல் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் கமாண்டர் மற்றும் ஸ்பானிஷ் அமெரிக்க விண்வெளி வீரர் மைகில் லோப்ச, சுவிசை சேர்ந்த பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் கெரல்டைன் பாஸ்ச நெட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இம்முயற்சி வரும் 2017ம் ஆண்டில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. nbsp;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.