வெள்ளி, 14 மார்ச், 2014

கழிவு நீரில் கையாடல் செய்த அதிகாரி

சுவிட்சர்லாந்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு சங்கத்தில் நடைபெற்ற கையாடல் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சுவிசின் வாட் மாகாணத்தில் உள்ள மோர்க்ஸ் பகுதியில் நகராட்சி சங்கத்தின் கீழ் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு சங்கம் ஒன்று உள்ளது.

இதன் நிதி பொறுப்பாளராக கடந்த 1996ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார், இந்நிலையில் இவருடைய காலகட்டத்தில் சுமார் 770,000 பிராங்குகள் (880,000 டொலர்கள்) கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த அதிகாரி இறந்துவிட்ட நிலையில் தற்போது இந்த கையாடல் பற்றிய விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது புரியாத புதிராக உள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மோர்க்ஸ் பகுதி மேயர் வின்சன்ட் ஜாக்யூஸ் கூறுகையில், சமீபத்தில் அறியப்பட்ட இவ்விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இது தனது நம்பிக்கையை உலுக்கும் வகையில் உள்ளது எனவும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.