ஞாயிறு, 2 மார்ச், 2014

பயிர்களை நாசமாக்கும் காட்டுபன்றிகள்

சுவிசில் காட்டு பன்றிகள் பயிர்களை பெருமளவில் சேதப்படுத்தியுள்ளது.
சுவிசின் ஆர்கூ பகுதியில் Wild boars என்ற காட்டு பன்றிகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசமாக்கியுள்ளது.

இக்காட்டு பன்றிகள் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் பனியினால் காட்டை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் வரத்தொடங்கியது என சுவிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 7,80,000 பிராங்குகள் (8,77,000 டொலர்கள்) மதிப்புடைய பயிர்களை சேதப்படுத்தியதால், பன்றிகளை வேட்டையாடக்கூடாது என இரு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த சட்டம் மாறி, அவைகளை சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்பேரில் கடந்த 2012ம் ஆண்டு 1,600 பன்றிகளும் 2013ம் ஆண்டில் 1200 பன்றிகளும் வேட்டைகாரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டன.
மேலும் இரவு நேரங்களில் பன்றிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக அகச்சிவப்பு கண்காணிப்பு சாதனங்களை (infrared tracking devices) ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.