புதன், 26 மார்ச், 2014

இதோ வருகிறது 'ராக்' ஷோ

சுவிசில் பிரபல மேற்கத்திய இசைக்குழுவினர் தங்களது இசை நிகழ்ச்சியை கோடை விடுமுறையில் அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர்.
சுவிசின் சூரிச் மாகாணத்தில் 'The Rolling Stones' என்ற இசைக்குழுவினர் வரும் கோடை விடுமுறையில் தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.
இதற்காக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவிருந்த தங்களது நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் நாளை முதல் கொடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மிக உயர்ந்த நுழைவுச்சீட்டின் விலை 360.70 பிராங்குகள் (417 டொலர்கள்) என கூறப்படுகிறது.
நான்கு பேரினை கொண்ட இவ்விசைக்குழு கடந்த 2007ம் ஆண்டு சுவிசில் அரங்கேற்றம் நடத்தி 12,000 ரசிகர்களை ஈர்த்தது குறிப்பிடதக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.