செவ்வாய், 4 மார்ச், 2014

ரிவர்ஸ்சில் எமனாக மாறிய கார்

சுவிசில் காரை பின்னோக்கி ஓட்டி சென்ற நபர் ஒருவர் எதிர்பாரதவிதமாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுவிசின் கிராவுபண்டன்(Graubünden) மாகாணத்தில் உள்ள ஷீயீட்(Scheid) என்ற கிராமத்தில் நேற்று முன் தினம் 41 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது குடியிருப்பின் கார் நிறுத்தத்திலிருந்து காரை பின்னோக்கி(Reverse) எடுத்துள்ளார்.

அப்போது திடீரென 20 மீற்றர் வேகத்தில் புறப்பட்ட கார் பலமுறை தலைகீழாய் சுழன்று அருகிலிருந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் வந்து நின்றது.

இச்சம்பவத்தை நேரடியாக பார்த்த நபர் ஒருவர் இவரை விரைவாக மருத்துவமனையில் அனுமதித்த போதும், விபத்து நேர்ந்த கணமே இவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பொலிசார் கூறுகையில், கார் ஜன்னல் வாயிலாக இந்நபர் வெளியே தள்ளப்பட்டதன் விளைவாக அவர் இறந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.