சனி, 22 மார்ச், 2014

அயல்நாட்டு பாலாடை கட்டி மோகத்தில் சுவிஸ்

சுவிசில் பெருகி வரும் அயல்நாட்டு பாலாடைக்கட்டி விற்பனையால் உள்ளூர் வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சுவிசின் வியாபார சரக்கான பாலாடைக்கட்டியின் விற்பனை கடந்தாண்டில் மிகவும் குறைந்துள்ளதாக புள்ளியல் விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் அந்நாட்டு மக்கள், சராசரியாக உள்ளுர் பாலாடைக்கட்டியை மொத்தம் 14.7 கிலோ உட்கொண்டுள்ளனர் என்றும் வெளிநாட்டு பாலாடைக்கட்டிகளை உண்பவரின் எண்ணிக்கை 6.25 கிலோ ஆக அதிகரித்து 1.6 சதவீதத்தை அடைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

மேலும் வெளிநாட்டு பாலாடைக்கட்டிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதே உள்நாட்டு பாலடைக்கட்டிகள் பின் தள்ளப்படுவதற்கான முக்கிய காரணமாகும் என தெரியவந்துள்ளது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.